இன்றைய ipl போட்டியில் புதிய சாதனையை படைத்த சூரியகுமார் யாதவ் !!!

ஐபிஎல் தொடரின் 20-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் மாஸ் காட்டினர். 4.5 ஓவரில் 49 ரன்கள் எடுத்திருக்கும்போது மும்பை முதல் விக்கெட்டை இழந்தது. டி காக் 15 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இதில் யாதவ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்தில் 79 ரன்களை பெற்றிருந்தார். இதுவே அவர் ipl வரலாற்றில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்