ஐ.பி.எல்- மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு.

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட்போட்டித் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள டுபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் நேற்று(05 )டுபாயில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிகாணும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கெப்பிட்டல் அணியும் போட்டியை எதிர்க்கொண்டது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 6 ஓவர்களில், ஒரு விக்கட் இழப்புக்கு 63 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து 20 ஓவர் முடிவில் மும்பை அணி மொத்தமாக 5 விக்கட் இழப்புக்கு200 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கெப்பிட்டல் அணி 201 ரன்கள் இலக்காக கொண்டு போட்டியை ஆரம்பித்தது.
முதல் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கெப்பிட்டல் அணி 20 ஓவர்களில்; 8 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் 6 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோல்வி அடைந்த டெல்லி கெப்பிட்டல் அணி வெளியேறுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன், இறுதிசுற்றில் போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதிகாணும் சுற்றில் நாளை மறுதினம் போட்டியிட்டு வெற்றி பெற்றால், இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கு இன்னொரு வாய்ப்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்