பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கட் போட்டியில் அபுதாபியில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில்; 3 ஆவது மற்றும் 4 ஆவது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும், பெங்களூர் ரோயல் செலஞ்ஜர்ஸ் அணிக்கும் இடையில் நடந்த போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற இந்த வெளியேற்றுதல் போட்டிக்கான சுற்றில் நாண சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பெங்களூர் ரோயல் செலஞ்ஜர்ஸ் அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாட சந்தர்ப்பம் வழங்கியது.

இதன்படி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 131 ஓட்டங்களை; எடுத்தது.

இதையடுத்து 132 ஓட்டங்கள்; பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்கள்;; எடுத்து வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் பெங்களூர் அணி நேற்றைய ஆட்டத்தோடு தொடரில் இருந்து வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்