விசேட சுற்றிவளைப்புகளில் 3 ஆயிரத்து 871 சந்தேகநபர்கள் கைது!
நாடுமுழுவதிலும் நான்கு மணித்தியாலங்களில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 3 ஆயிரத்து 871 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று (25) மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையில் இந்த சுற்றிவளைபுகளை பொலிஸார் மேற்கொண்டதில், பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டிருந்த ஆயிரத்து 430 பேரும், பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய 562 பேரும், போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஆயிரத்து 108 பேரும், ஆயுதங்களுடன் 16 பேரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, மதுபோதையில் வாகனஞ் செலுத்தியமைக்காக 607 வழக்குகளும், சாரதி அனுமதிப்பத்திரமில்லாது வாகனத்தை செலுத்தியமைக்காக 146 பேரும், போக்குவரத்துக் குற்றங்களுக்காக 6 ஆயிரத்து 173 வழக்குகளும் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை