May 1, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மரணித்தார் பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன்

பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் உடல்நலக் குறைவால் தமது 69ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். பிரபல பாடகி உமா ரமணன், சென்னை - அடையாரில் அவரது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவர் 6,000 இற்கும் அதிகமான மேடை நிகழ்வுகளில் பாடியுள்ளதுடன் 35 வருடங்களுக்கு ...

மேலும்..

பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா?

எரிபொருள் விலை குறைப்புடன் பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா? இல்லை? என்பது தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதுடன், இதன்போது டீசலின் விலை 30 ...

மேலும்..

மே தினத்தில் உயர்த்தப்பட்ட சம்பளம் மறுநாள் முறியடிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார். நிர்ணய சபையின் ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 02 மே 2024

02/05/2024 வியாழக்கிழமை  1)மேஷம்:- பங்குச் சந்தையில் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. புதிய நண்பர்களின் ஆலோசனை பலன் அளிக்கலாம்.கலைஞர்கள் புதிய வாய்ப்புகளை பெற தீவிர முயற்சி மேற்கொள்வார்கள். 2)ரிஷபம் :- கூட்டு தொழில் செய்பவர்கள் சுமாரான வருவாய் ஈட்டுவர். பங்கு சந்தை வியாபாரத்தில் அதிக லாபம் பெற அன்றாட ...

மேலும்..

கிரிக்கெட் மட்டையால் சிறுவன் உயிரிழப்பு

இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், தாக்கப்பட்ட மாணவன் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி - மொன்டகிரிஸ்டோ பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 13 வயதுடைய பாடசாலை மாணவர் ...

மேலும்..

புங்குடுதீவில் எலும்பு கூட்டு எச்சங்கள் – ஆரம்பமாகும் அகழ்வு பணிகள்

புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நாளைய தினம் வியாழக்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

மேலும்..

கிலோ கணக்கில் பீடி இலைகள் – நான்கு பேர் கைது

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் ) இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 70 இலட்சம் ரூபா பெறுமதியான 1346 கிலோ பீடி இலைகளுடன் 4 சந்தேக நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர் . கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ...

மேலும்..

தம்பலகாமம் படுகொலை தொடர்பில் 5 பொலிசாருக்கு ஆயுள்தண்டனை

தம்பலகாமம் பகுதியில் 01.02.1998ஆம் ஆண்டு 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றில் நடைபெற்று பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்றுவந்த இந்நிலையிலேயே குறித்த தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. குறித்த படுகொலையுடன் தொடர்புபட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ...

மேலும்..

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் மென்பான முகவர் கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14,570 மில்லி கிராம் ஐஸ் போதை பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு ...

மேலும்..

நாட்டின் பல பாகங்களில் வெப்பநிலை குறித்த எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, கிழக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும், “மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல ...

மேலும்..

3 தனியார் பேரூந்துகளிற்கு ஆப்பு

வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் 3 தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு அவைகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மூன்றுக்கு மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்தியமை, வீதியில் போட்டித்தன்மையில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. வடமாகாண ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும்  வௌியிடப்பட்டுள்ளது.

மேலும்..

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றையும் அது தொடர்பான சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் ...

மேலும்..

அஸ்வெசும கொடுப்பனவின் போலித்தகவல் கண்டறிய விஷேட வேலை திட்டம்

போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் பயனாளிகளை கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேலும்  போலியான தகவல்களை வழங்கி ...

மேலும்..

 10 ஆயிரம் பொலிஸ் பாதுகாப்புடன் மே தினம்

மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் மக்களை பேரணிகளுக்காக ...

மேலும்..

குறைக்கப்பட்ட சீமெந்து விலை

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை திருத்தத்தின் படி ஒரு சீமெந்து மூட்டை ஒன்றின் விலை ...

மேலும்..

சினோபெக் எரிபொருட்களின் புதிய விலைகள்

சினோபெக் நிறுவன எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சினோபெக் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதற்கமைவாக கீழ் உள்ளவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்..

ஜனாதிபதியின் மே தின செய்தி

உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை முறியடிக்க வேண்டிய ...

மேலும்..