மீனவர்களின் கோரிக்கை நியாயமானது !

முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியிலும் மீனவர் மத்தியிலும் நிலவிவந்த பிரச்சனைகள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக அமைச்சர் தலைமையிலான குழுவினர்கள் மூன்று நாள் மக்கள் சந்திப்பு முல்லைத்தீவில் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் 26.02.21 அன்று முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் மீனவர்களையும் மீனவ சங்கங்களையும் பொதுமக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு கேட்டறிந்துகொண்டுள்ளார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் எடுத்து கூறியுள்ளார்கள் முல்லைத்தீவு வாழ் வாழ்வாதாரத்தினை ஒன்றரை இரண்டு ஆண்டுகளுக்குள் பாதுகாத்து பலப்படுத்தி உறுதி படுத்துவோம் என்றும் வடக்கு கிழக்கில் நிர் வேளாண்மையினை வேகமாக செய்வதற்கு உத்தேசித்துள்ளோன் கடற்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தினை பலப்படுத்த உத்தேசித்துள்ளேன்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் நிறுத்தப்படும் இந்திய மீனவர்களின் நிலைப்படு பேச்சு தொடர்பில் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் பிரச்சனை தீர்த்து தராவிட்டால் போராட்டம் நடத்துவோம். அமைச்சரின் வடமாகாண நடவடிக்கையினை முடக்குவோம் என்று சொல்லியுள்ளார்கள். நான் பொறுமை பொறுமை என்று சொல்லி வருகிறேன். இருந்தாலும் மீனவர்களின் கோரிக்கை நியாயமானது தீர்க்க முற்படுவேன்.

பத்தாயிரம் கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு போய் அங்குள்ள கடற்தொழிலாளர்களுடனும் ஆட்சியாளர்களுடனும் கதைப்பதாக சொல்லியிருந்தேன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் இங்கிருந்து கதைப்பதை விட பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு சென்று அந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.