ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகும் அஸ்வின்!

இம்முறை இடம்பெறும் 2021 ஆண்டுக்கான ஐ.பி.எல். இருபதுக்கு – 20 தொடரிலிருந்து டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் விலகியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தற்போதைய சூழல் நல்லபடியாக மாறினால், நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.