பிரதான செய்திகள்

இலங்கை ஒற்றையாட்சி நாடு இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள்- சரத் பொன்சேகா

இலங்கை ஒற்றையாட்சி நாடாகும், இங்கு சமஷ்டிக்கு இடமில்லை, இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள். இவ்வாறு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ...

மேலும்..

கஜேந்திரன் உட்பட 18 பேருக்கு பிணை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினா் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் நேற்று இரவு 11 மணியளவில் யாழ்.பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 18 பேரையும் ...

மேலும்..

வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

யுத்தத்திற்கு முன்னர் வடமாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, அந்த வலுவான பொருளாதாரத்தை வடக்கில் மீண்டும் ஏற்படுத்த தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். வடமாகாண பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று (10) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து ...

மேலும்..

197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள், காசோலைகள் வழங்கி வைப்பு!

வடக்கில் மீள்குடியேறவுள்ள 197 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் தலா 38,000 ரூபா காசோலைகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (11) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, உள்நாட்டு யுத்தத்தின் போது பாதுகாப்பு ...

மேலும்..

கலாச்சாரம் என்பது நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியின் பாலம்- ரணில்

நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக புதிய எதிர்பார்புடன் அனைத்து இனத்தவர்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் பொன்னம்பலம் ...

மேலும்..

யாழில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக போராட்டதில் ஈடுப்பட்ட 18 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ். நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட 18 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இலங்கையின் 75வது ...

மேலும்..

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது

பிரபலமான தீர்மானங்களால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால், நாட்டின் எதிர்காலத்திற்காக அனைத்து அரசியல் தலைவர்களும் பிரபலமற்ற ஆனாலும் நாட்டுக்கு சாதகமான கடினமான தீர்மானங்களை எடுப்பார்கள் என தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வரி விதிப்பு செய்யப்பட்டது நாட்டு ...

மேலும்..

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா (Sahir Shamshad Mirza) நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். நட்பு நாடுகள் என்ற வகையில் ...

மேலும்..

புகையிரத பாதை அபிவிருத்திப் பணியில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவு!

வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வவுனியாவிற்கும் அனுராதபுரத்திற்கும் ...

மேலும்..

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என ...

மேலும்..

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நிதி இல்லை

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் 22 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக அதன் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார். ஆனால் அதற்காக ...

மேலும்..

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது

பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன ...

மேலும்..

மீண்டும் யாழ் செல்லவுள்ள ரணில் – விசேட கூட்டம் இன்று

ரணில் விக்ரமசிங்க யாழ். விஜயம் தொடர்பிலான முன்னேற்பாடு பற்றிய விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (09) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு ...

மேலும்..

நேற்று பௌத்த பிக்குகள் எரித்தது 13ஐ அல்ல, ஒட்டுமொத்த நாட்டை…கோ.கருணாகரம்

(சுமன்) நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையே எரிக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா ...

மேலும்..

சீனாவுக்கான விமான சேவை குறித்த அறிவிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்த நிலையில், சீனாவுக்கான வணிக விமானச் சேவைகளை ஏப்ரல் 2023 முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் ...

மேலும்..