பிரதான செய்திகள்

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இதுவரை 15,000 ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒரு மாதத்திற்கு ...

மேலும்..

தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்தி வைக்க எந்தத் தேர்தலும் இல்லை.. ஜனாதிபதி தெரிவிப்பு!

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முன்னுரிமையாக கொண்டு தான் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, "இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, நாட்டுக்கு அரிசி வாங்குவதற்கு 20 பில்லியன் ...

மேலும்..

தனுஷ்க குணதிலாவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவு!

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 31 வயதான குணதிலக்க ...

மேலும்..

ஜனாதிபதி மொட்டுக்கு வழங்கிய 03 வாக்குறுதிகள் – வௌிப்படுத்திய சஜித்!

தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்காமல் இருத்தல் ஆகிய 3 கொள்கை ரீதியான வாக்குறுதிகளின் பிரகாரமே தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ளார் ...

மேலும்..

காணிகளை கையேற்க தயக்கம் காட்டும் பொது மக்கள்!

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் ...

மேலும்..

மரண தண்டனை குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்!

இலங்கையிலுள்ள எந்தவொரு நீதிமன்றமும் பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதில்லை என தற்போதைய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு 2019 ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ...

மேலும்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊழியர்கள் போராட்டம்

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச வைத்தியசாலைகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் ...

மேலும்..

தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 3250 ரூபாவாக நிர்ணயித்து வர்த்தமானிப்படுத்த வேண்டும் – வடிவேல் சுரேஷ்

தோட்டத்தொழிலாளர் சம்பளத்தை 3250 ரூபா ஆக நிர்ணயித்து வர்த்தமானிப்படுத்தவேண்டும்! வடிவேல் சுரேஷ் கோரிக்கை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 3 ஆயிரத்து 250 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கொழும்பு துறைமுக ...

மேலும்..

உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது : வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே எஞ்சியுள்ளது -மஹிந்த தேசப்பிரிய

உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. அதனை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தலில் மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளது என முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - எரிபொருள் தட்டுப்பாடு , வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

அமெரிக்க உயர் மட்ட பாதுகாப்பு குழுவின் விஜயம் குறித்த தகவல்களை நான் அறியேன் – அலி சப்ரி

அமெரிக்காவின் முதனிலை பிரதி பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு ஏன் வருகை தந்தார்கள், எந்த விடயம் தொடர்பில் பேச்சில் ஈடுபட்டார்கள் என்பதை நான் அறியவில்லை என வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தேசிய சுதந்திர முன்னணியின் ...

மேலும்..

வடமாகாண சுகாதார நிர்வாக விடயங்களில் முறைகேடுகளாம்! முன்னாள் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் காட்டம

வடக்கு மாகாண சுகாதார நிர்வாக விடயத்தில் உயர் பொறுப்புக்கான பதவிக்குச் சட்டவிரோதமானதும், முறை கோடானதுமான நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து ...

மேலும்..

வலி. வடக்கில் மீள் குடியிருக்கும் மக்களுக்கு உதவுமாறு சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை! யாழ். அரச அதிபர் சிவபாலசுந்தரன்

யாழ். வலி. வடக்கில் மீள் குடியிருக்கும் மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளுமாறு மேற்குலக சர்வதேச நாடுகளிடமிருந்து உதவிகளைக் கேட்டிருக்கின்றோம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற 'வலி. வடக்கில் மீள் குடியேறியுள்ள மக்களின் ...

மேலும்..

தென்கொரிய தூதுவரை சந்தித்தார் சபாநாயகர்!

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வொன்ஜின் ஜியோன் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்தபோது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்தோடு 2030 இல் தென் கொரியாவில் நடைபெறவுள்ள புசான் உலக கண்காட்சி தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு தீர்வுகாண விசேட நடவடிக்கைகள் தேவை -சார்ள்ஸ் நிர்மலநாதன்

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் வடக்கு மீனவர்கள் வாழ்வாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தப் பிரச்சினைக்கு கடற்றொழில் அமைச்சரால் நிரந்தர தீர்வைக் காண முடியாது என்பது எமது நிலைப்பாடாகும். ஆகவே காலம் காலமாகத் தொடரும் பிரச்சினைக்கு தீர்வு காண வெளிவிவகாரத்துறை ...

மேலும்..

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்ட சாணக்கியன்!

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகரின் அறிவிப்பின் கீழ் பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்தார். இதற்கமைய கோப் குழுவிற்கு ...

மேலும்..