பிரதான செய்திகள்

உள்ளூர் மிளகாய் உற்பத்தியை 25% அதிகரிக்க நடவடிக்கை

இந்த வருடத்தில் உள்ளுர் மிளகாய் உற்பத்தியை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் (ASMP) அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பதுளை மாவட்டத்தில் மிளகாய் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ...

மேலும்..

தபால் மூல வாக்குசீட்டுகள் விநியோகிக்க முடியாது

நாளை (15) தபால் மூல வாக்குசீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்​ைசாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கேள்வி - வாக்களிப்பு தொடர்பில் ...

மேலும்..

உயிரைக் காப்பாற்ற நாட்டை விட்டு ஓடும் கோழையல்ல எங்கள் அண்ணன் – சீமான்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என பழ. நெடுமாறன் கூறிய கருத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுத்துள்ளார். "நாட்டை விட்டு போக மாட்டேன் என நாட்டுக்காக சண்டை செய்த மாவீரன் பிரபாகரன், மக்களையும், பிள்ளைகளையும் ...

மேலும்..

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை…

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், திறைசேரி செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவின் ...

மேலும்..

2009லேயே முடிவு கட்டிவிட்டோம் – மீண்டும் உயிர்பெற பிரபாகரன் கடவுளா – கோட்டாபய ஆவேசம்!

"உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா" இவ்வாறு யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ...

மேலும்..

அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சை ஒத்திவைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம்

அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் நிதிப்பற்றாக்குறையினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் அதற்குரிய அமைச்சரின் தனிப்பட்ட தீர்மானம் ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறுவது நகைப்புக்குரியது- பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி ஒருவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கைகள் நகைப்புக்குரியவை என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் ...

மேலும்..

ஹொரோயின் போதைப்பொருள் கடத்தல் குழு ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கைது-கல்முனை பொலிஸார் அதிரடி

ஹொரோயின்  போதைப்பொருள் முகவராக   செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்ப பெண்  ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன்    கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் வை.டி செலரின்(40313) தகவலுக்கமைய செயற்பட்ட ...

மேலும்..

15 வருடங்களின் பின்னர் அரசியல் கைதி பிணையில் விடுதலை!

காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி அரசியல் கைதி கந்தையா இளங்கோவிற்கு பினை வழங்கினார்..- 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி காலி தெற்கு கடற்படை முகாமை தாக்கி கடற்படையை ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருக்கிறார்! பழ நெடுமாறன் மீண்டும் பரபரப்பு பேச்சு…

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பிரபாகரன் அனுமதித்ததன் பின்பே இதை கூறுகிறேன் என பழ நெடுமாறன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் ...

மேலும்..

நாட்டை மீட்க வேண்டுமாக இருந்தால் சஜித் ஒன்றே தீர்வு! ஊடகச் சந்திப்பில் சஜித் இணைப்பாளர் வினோகாந்த் காட்டம்!

முன்னொருபோதுமில்லாத வகையில் நாடு பொருளாதார நெருக்கடியால் அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இதனை மீளக்கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இன்று இருக்கின்ற ஒரே ஒரு தீர்வு சஜித் பிரேமதாசா மாத்திரமே. இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

மேலும்..

மலையக மக்களுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் – பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) " மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என ...

மேலும்..

மாணவர்கள் சற்றுலா சென்ற படகு விபத்து! 4 பேர் பரிதாப மரணம்!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, ஆசிரியர் ஒருவர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுவெந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் ...

மேலும்..

கிழக்கு மாகாண மக்களை கண்டு கொள்ளாத இந்திய அரசியல்வாதிகள்..!வட மாகாணத்தில் மாத்திரம் தானா தமிழ் மக்கள் வாழ்கின்றனர்?

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இந்தியக் குழுவினர் கிழக்கு மாகாண மக்களை ...

மேலும்..

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகார பகிர்வு கோருவதை ஏன் எதிர்க்கின்றனர்? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!

பிளவுபடாத நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிறைவேற்று அதிபர் என்றவகையில் ரணில் விக்ரமசிங்க அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற ...

மேலும்..