பிரதான செய்திகள்

தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றஉறுப்பினர்களின் இரண்டு மாத சம்பளத்தை இடைநிறுத்தி பயன்படுத்துங்கள்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்றால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக விழா!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 அம்பாறை, காரைதீவு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக விழாவானது நேற்றைய தினம் நடைபெற்றது. இதன் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான M. A. சுமந்திரன் ( ஜானதிபதி சட்டத்தரணி), தவராசா ...

மேலும்..

6 பில்லியன் டொலர் நட்டஈட்டை கோரும் இலங்கை!

இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக 6 பில்லியன் டொலருக்கும் அதிகமான ...

மேலும்..

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றம்!

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.பி. பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல், மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை ...

மேலும்..

தீவகம், ஊற்காவற்றுறை வேட்பாளர்களுடன் சிறீதரன் கலந்துரையாடல்..

எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தீவகம், ஊற்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளாக போட்டியிடும் வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  நேற்றைய தினம் தம்பாட்டியில் சந்தித்து கலந்துரையாடினார். ...

மேலும்..

தமிழரசின் ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் (05/02/2023) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..

மாபெரும் மக்கள் பேரணி -தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம்

பல்கலைக்கழக மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள், சிவில் சமூகங்கள் ஆகியோர் இணைந்தது முன்னெடுத்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி மாபெரும் மக்கள் பேரணி முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த, ...

மேலும்..

யாழில் சிங்கக் கொடியுடன் இளைஞர்கள் குறளி வித்தை – கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினர்

இலங்கையின் தேசியக் கொடியான வாளேந்திய சிங்கத்தை தமது உந்துருளி, முச்சக்கர வண்டி என்பவற்றில் கட்டியவாறு யாழ். நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு சிறுகும்பல் பயணித்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ...

மேலும்..

இன அழிப்புப் போரில் தமிழர்களின் இழப்பிற்கு இதுவரை இல்லை நீதி – பிரித்தானிய நாடாளுமன்றில் அறிக்கை!

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரித்தானியா வாழ் தமிழர்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் ...

மேலும்..

2ம் நாள் பேரணிக்குள் புகுந்த புலனாய்வாளர்கள் – மாணவர்களுடன் முறுகல் நிலை

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு வரையான இரண்டாம் நாள் பேரணி இன்று காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி வவுனியா மற்றும் மன்னார் எழுச்சி அணிகளை இணைத்து, முல்லைத்தீவு நோக்கி ...

மேலும்..

இந்திய அரசாங்கத்தினால் 50 பேருந்துகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் அடையாள ரீதியிலாக ...

மேலும்..

மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் பாடசாலை மாணவர்கள் இருவர் மீது மதுபோதையில் வந்த மூன்று பொலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் இது தொடர்பாக முல்லைத்தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் ...

மேலும்..

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு ...

மேலும்..

உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இந்த கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக வெற்றிடங்கள் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர மீள் மதிப்பீட்டு முடிவுகளின் பின்னர், பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களும் அங்கு பரிசீலிக்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ...

மேலும்..

சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு மனம் விடவில்லை- அங்கயன் இராமநாதன்

70 வருடமாக கதைக்கின்ற போதிலும் இதுவரை எங்களுக்கென்று சுதந்திரம் கிடைக்காத நிலையில் அதைக் கொண்டாடுவதற்கு மனம் விடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வினை தொடர்ந்து, இன்று சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளாமை ...

மேலும்..