இலங்கை செய்திகள்

தன்னைக் கொல்லவந்த ஐவரையும் மன்னிக்க சுமந்திரன் எம்.பி. தயாரா? விஜயதாஸ கேள்வி

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர் கூற வேண்டும் என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதி அமைச்சர் தொடர்பில் கடந்த ...

மேலும்..

அரசமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால்செய்யும் அதிகாரம் கிடையாது! ஜனாதிபதிக்கு ஜி.எல்.பீரிஸ் இடித்துரைப்பு

அரசமைப்பு சபையின் சுயாதீனத்தை சவால் செய்ய ஜனாதிபதிக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். தற்போது ஆணைக்குழுக்கள் பெயரளவிலேயே சுயாதீன ஆணைக்குழுக்களாக காணப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் அரசியல் சபைக்கு முக்கிய பங்கு ...

மேலும்..

திருமலையில் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக   சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

திருகோணமலை,வெல்கம் விகாரை வனப்பகுதியில் பாரிய அளவிலான காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்து  அப்பகுதி மக்கள்  கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். எவ்வாறு இருப்பினும்  இதுவரை எந்த ஓர் அரச அதிகாரிகளும்  இது தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் ...

மேலும்..

மன்னார் பிரீமியரில் வெற்றிவாகை சூடியது அயிலன் எவ்.சி. அணி !

மன்னார் பிரீமியர் லீக் தொடரின்  போட்டி   ஞாயிற்றுக்கிழமை மாலை - மன்னார் பள்ளிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. ஏ.கே.ஆர்.எவ்.சி. அணிக்கும் அயிலன் எவ்.சி. அணிக்கும் இடையே இடம்பெற்ற இப்போட்டியில் அயிலன் எவ்.சி. அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ...

மேலும்..

15 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய விளையாட்டுப் பேரவை!

கலாநிதி மையா குணசேகர தலைமையில் 15 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய விளையாட்டுப் பேரவையை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க இதன் தலைவராக முன்னர் பதவி வகித்திருந்தார். இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட குறித்த தேசிய ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 125 பேர் வீடு செல்வேண்டும் ரொஷான் ரணசிங்க எதிர்வுகூறல்

சிங்கம் போன்று சரியானதை சரி என்றும் பிழையை பிழை என்றும் கூறும் ஒரு தரப்பினரே இந்த நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் தற்போதுள்ள 225 பேரில் 125 பேர் வீட்டுக்கு செல்வார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் ...

மேலும்..

10 பேர்ச் வீட்டுக்காணித் திட்டம்: மனோ கணேசன் வேண்டுகோள்!

'ஜனாதிபதி ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணித் திட்டம் அவிசாவளையில் ஆரம்பிக்கப்பட வேண்டும்' என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதி பென்ரித் தோட்டம் கருங்காளி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தின் சேதங்களைப் பார்வையிடச்  சென்ற ...

மேலும்..

தமிழர்களுக்கு எதிரான காட்டுச் சட்டங்கள் நிறுத்தப்படவேண்டும் என்கிறார் கஜேந்திரன்!

தமிழ் மக்களுடைய அடிப்படை உரிமைகளை மறுப்பதும் தமிழ் மக்களுக்கு எதிராக காட்டுச் சட்டங்களை பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டு ...

மேலும்..

பழம்பெரும் நடிகர் ‘சிறிசேன’ காலமானார்

இலங்கையைச் சேர்ந்த பிரபல மூத்த நடிகரான 'சுமிந்த சிறிசேன' தனது 75 ஆவது வயதில் திங்கட்கிழமை காலமானார். கம்பஹாவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

பெருமளவான இராணுவ அங்கிகள் காங்கேசன்துறையில் மீட்கப்பட்டன!

இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியில், காணி ஒன்றை அதன் உரிமையாளர் துப்ர்ரவு செய்து, கிணற்றை இறைத்த போது ...

மேலும்..

அரசியல்வாதிகள் பொதுப் போக்குவரத்தை பாவிக்கும் கலாசாரத்தை உருவாக்குவோம் அநுர திடசங்கற்பம்

பஸ், ரயில் என அரசியல்வாதிகள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் புதிய அரசியல் கலாசாரத்தை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தனிப்பட்ட பாதுகாப்புக்காக தேசிய மக்கள் ...

மேலும்..

இந்தியாவிலிருந்து யாழிற்கு நேரடியாக சீனி இறக்குமதி! அமைச்சர் டக்ளஸ் உத்தரவாதம்

இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை யாழிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற கூட்டுறவு சங்கங்கங்களின் ஆணையாளர்கள், தலைவர்கள், சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

உணவுப்பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் 50000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு இவ்வாறு மேலும் 50000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ...

மேலும்..

போதகருக்கு ஒருசட்டம் தேரருக்கு ஒரு சட்டமா? சாணக்கியன் கேள்வி

தமிழர்களைத் துண்டு துண்டாக வெட்டுவேன் எனக் கருத்துத் தெரிவித்த அம்பிட்டியே சுமண தேரருக்கு ஒரு சட்டமும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு இன்னுமொரு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

சர்வதேச மனக்கணித போட்டியில் யாழை சேர்ந்த சிறுவன் சாதனை!

2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழைச் சேர்ந்த மாணவரொருவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். யுசி மாஸின் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவனே ஆறு வயதுக்குட்பட்ட ஏ1 பிரிவு போட்டியிலேயே இரண்டாம் ...

மேலும்..