இலங்கை செய்திகள்

நாளை இறுதி நாள் – பொலிஸாரின் எச்சரிக்கை…! மீறினால் கைது

கடந்த மார்ச் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்தவர்கள் தங்கள் விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..

ஐ.தே.க. – ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு நாளைவரை ஒத்திவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே நேற்று நடைபெறவிருந்த கூட்டம் நாளை (புதன்கிழமை) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் குழுவில் அக்கட்சியின் உப தலைவர் ரவி கருணநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களானா ருவான் விஜேவர்தன, ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 310 பேர் வெளியேறினர்!

வவுனியா இராணுவ முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிறிதொரு தொகுதியினர் இன்று(செவ்வாய்கிழமை) விடுவிக்கப்பட்டனர். கொரோனோ வைரஸ் தாக்கம் நாட்டில் இனம் காணப்பட்ட நிலையில் வெளிநாட்டிலிருந்து வருகை தரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்தவகையில் வவுனியாமா வமட்டத்தில் பம்பைமடு இராணுவ முகாம் ...

மேலும்..

உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் தகனம்…!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இரண்டாவது நபரின் உடல் நேற்று (திங்கட்கிழமை) பாதுகாப்புகளுக்கு மத்தியில் தகனம் செய்யப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் பிரகாரம் நீர்கொழும்பு பொது மயானத்தில் குறித்த நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அத்தோடு நீர்கொழும்பு வைத்தியசாலை வளாகமும் சுத்திகரிக்கப்பட்டது என ...

மேலும்..

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள்

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக ...

மேலும்..

ஊரடங்கை மீறிய 7,358 பேர் கைது

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7,358 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது ...

மேலும்..

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிறுவன மற்றும் தனிப்பட்ட வகையில் அதிக பங்களிப்பு

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை பலப்படுத்துவதற்கு நிறுவன மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் பெருமளவு பங்களிப்பு செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் ...

மேலும்..

கொரோனா நோயாளரினால் மூடப்பட்டது களுபோவில வைத்தியசாலையின் நோயாளர் விடுதி!

களுபோவில வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், 15 நோயாளர்கள் மற்றும் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும்..

பரீட்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று!

பரீட்சைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினால் எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள பரீட்சைகள் குறித்த கலந்துரையாடல் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளதாக உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்தும் விதம் ...

மேலும்..

ஜப்பானிலிருந்து இன்று கொண்டுவரப்படுகின்றது கொரோனாவினை குணப்படுத்தும் மருந்து!

கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கான சிகிச்சைகளை வழங்கும் வகையில் எவிகன் என்ற மருந்து வகையை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு குறித்த மருந்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக ...

மேலும்..

கொரோனா வைரஸ் – தற்காலிகமாக மூடப்பட்டது சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம்!

சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் பேச்சாளர் ருவந்தி பெல்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சிங்கப்பூருக்கான இலங்கை ...

மேலும்..

யாழில் கொரோனா சந்தேகத்தில் 24 மணிநேரத்தில் 7 பேர் சேர்ப்பு!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுச் சந்தேகத்தில் 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொலிஸார், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய், தாவடியைச் சேர்ந்த பெண், ...

மேலும்..

வடக்கில் இன்னும் நிவாரணம் இல்லை!

* அரசு அசமந்தம் * நிதி ஒதுக்கீடு இல்லை * பட்டினி நிலை ஏற்படும் அபாயம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும் அன்றாடத் தொழிலாளர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்குள் முடக்கப்பட்டவர்களுக்கும் அரசின் எந்தவொரு நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. நலன் விரும்பிகள் ...

மேலும்..

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினரால் அளவெட்டி மக்களுக்கு உதவி!

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜ் தனது சொந்த நிதியிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் கிடைக்கப்பெற்ற நிதி உதவியிலும் தனது வட்டாரத்தில் பல்வேறு நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார். தற்போது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் சுயதொழில் மேற்கொள்கின்ற பல குடும்பங்கள் மிகவும் வறுமையில் ...

மேலும்..

தமிழரசு மகளிர் அணியால் வலி.வடக்கு மக்களுக்கு இரவு உணவு!

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திருமதி சி.விமலேஸ்வரி ( இளைஞர் சேவைகள் ஓய்வுபெற்ற மாகாண பணிப்பாளர்) அவர்களின் நிதியுதவி ஊடாக வலிகாமம் வடக்கிலுள்ள கட்டுவன், குட்டியப்புலம், மாவை கலட்டி , மாவிட்டபுரம் தெற்கு , தெல்லிப்பழை ...

மேலும்..