இலங்கை செய்திகள்

யாழ் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட 50ஆயிரம் தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவு!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் ...

மேலும்..

கொழும்புக்கு வரும் வாகனங்களுக்கு ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் ,பொலிஸார் நடவடிக்கை

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று முதல் விசேட ஸ்டிக்கர் ஒன்று அறிமுகப்படுத்தப்படும்  என பொலிஸார் தெரிவிக்கின்றனர் குறித்த ஸ்டிக்கர் ஒரு நாளைக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். ஒரே வாகனத்தை மீண்டும், ...

மேலும்..

பியுமி ஹன்சமாலியுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 13 பேர் பிணையில் விடுதலை

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 13 பேரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி குறித்த பிறந்தநாள் கொண்டாடத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து ...

மேலும்..

யாழ்ப்பாணம், மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை பொருளை கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் கரையில் பாதுகாப்பை ...

மேலும்..

தபாலகங்கள் அனைத்து நாளை திறப்பு

இந்த மாதத்துக்குரிய பொதுமக்களின் கொடுப்பனவுகளை செலுத்துதல், மருந்துகளை விநியோகித்தல் உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட கடமைகளுக்காக, நாளை (3) தொடக்கம் நாடளாவிய ரீதியில் உள்ள தபாலகங்கள், உப தபாலகங்களை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வரும் பயனாளிகளுக்காக குறித்த கொடுப்பனவுக்கான அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டை ...

மேலும்..

கொரோனா தொற்றின் ஆபத்தறிந்து மக்கள் வீதிகளுக்கு இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும் : சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் !

(நூருல் ஹுதா உமர்) நாட்டில் வேகமாக அரிகரித்துவரும் கொரோனாவின் ஆபத்தை அறிந்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும். கடந்த காலங்களில் மக்கள் தந்த ஒத்துழைப்பினாலையே இந்த மூன்றாம் அலையில் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு தொற்றாளர்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ...

மேலும்..

5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் ஆலையடிவேம்பிலும் ஆரம்பம்

கொவிட் 19 பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வதாரத்தின் பொருட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் திட்டம் இன்று தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார புத்தெழிச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் சுற்று நிருபத்திற்கு அமைவாக ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கொவிட்-19 மூன்றாம் அலையினால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரங்களுக்கும், தனிப்பட்டவர்களுக்குமான சலுகைத் திட்டங்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. விபரம் இணைப்பு

மேலும்..

தீக்கிரையான கப்பல் மூழ்க தொடங்கியுள்ளது

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில்மூழ்க தொடங்கியுள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலின் ஒரு பகுதிக்குள் நீர் செல்ல தொடங்கியுள்ளதால் கப்பல் மூழ்க ஆரம்பித்துள்ளது என கடற்படை தெரிவித்துள்ளது. தீயை பெருமளவிற்கு கட்டுப்படுத்திவிட்டோம் ஆனால் கப்பலின் சில பகுதிகள் மூழ்க ஆரம்பித்துவிட்டன என கடற்படை பேச்சாளர் ...

மேலும்..

இம்மாதம் 3 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இவ்வருடத்தினுள் 50 மில்லியன் பைஸர் கொவிட் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதன் முதல் தொகுதியாக 3 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இம்மாதமளவில் இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும்..

யாழ் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஜனாதிபதி விசேட அனுமதியின் கீழ் ஊசி ஏற்றும் செயற்பாடு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், ஏனைய பீடங்களில்500 பேருக்கும் மொத்தமாக 2100 பேருக்கு கொரோனா ...

மேலும்..

மட்டக்களப்பில் முடக்கப்பட்ட சின்ன ஊறணி பகுதியை நாளை திறக்க பரிந்துரைப்பு

மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட சின்ன ஊறணி கிராமசேவகர் பிரிவை நாளை (03) திறப்பதற்கு தேசிய கொரோனா தடுப்பு செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று (2) ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலமான நேற்று காலை 10 மணியில் இருந்து இன்று காலை 10 மணிவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் ...

மேலும்..

இந்திய லட்சத்தீவு இறைநேசர்களின் புனிதபூமியை பாதுகாக்க பிரார்த்தனை புரிவோம் : ஹரீஸ் எம்.பி 

ஆன்மிகத்தில் உச்சகட்ட பேணுதல்களை கொண்ட லட்சத்தீவு பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலோசனையுடன் லட்சத்தீவின் மகிமையை சீரழிக்கும் நோக்குடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற போர்வையில் ஆடம்பர உல்லாச விடுதிகளையும், கசினோ நிலையங்களையும் அமைத்து மதுபாவனைக்கான வசதிகளையும் உண்டாக்கி மிகப்பெரும் நாசகார திட்டங்களுடன் கூடிய ...

மேலும்..

அரசியலுக்காக பேதங்ளைப் பேசி அதிகாரங்களை அடைந்து கொள்ளும் எழிய சிந்தனைகள் எம்மிடம் இல்லை : ஏ.எல்.எம் அதாஉல்லா எம்.பி

(நூருல் ஹுதா உமர்) இன உறவுகளை ஸ்திரப்படுத்தும் வகையிலான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசியல் தலைவர்கள் சிந்திப்பதுடன் அரச அதிகாரிகளும் இதற்குத் துணைபுரிய வேண்டும். அக்கரைப்பற்று அல்- ஹிதாயா வித்தியாலயம் அன்று ரோமன் கத்தோலிக்க பாடசாலையாக இருந்தபோது, முஸ்லிம் மாணவர்கள் பலருக்கு மூத்த ...

மேலும்..