இலங்கை செய்திகள்

பொலிஸாரின் செயற்பாடு குறித்து கண்ணீருடன் மனித உரிமை ஆணைக்குழுவில் மாற்றுத்திறனாளி முறைப்பாடு

மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் ...

மேலும்..

காரைதீவு சித்தானைக்குட்டிபுரம் மக்களுக்கு 1967நண்பர்கள் அமைப்பினால் குழாய்நீர் இணைப்பு மலசலகூடவசதி..

நீண்டகாலமாக நிலவிவந்த காரைதீவு சித்தானைக்குட்டிபுர கிராம மக்களின் குடிநீர் மற்றும் மலசலகூடப்பிரச்சனையை காரைதீவு 1967நண்பர்கள் அமைப்பினர் பகுதியளவில் நிறைவேற்றி கையளித்துள்ளனர். அக்கையளிப்பு வைபவம் நேற்று 1967 நண்பர்கள் அமைப்பின் தலைவரும் சிரேஸ்ட படவரைஞருமான செ.மணிச்சந்திரன் தலைமையில் சித்தானைக்குட்டிபுரம் பகுதியில் எளிமையாக நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதமஅதிதியாக ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, எதிர்வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைபடுத்தவும் அரச உயர் மட்டம் எண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ...

மேலும்..

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் பதற்றம்

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைது செய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில் நெற்செய்கை காணி தொடர்பில் நீண்ட ...

மேலும்..

நாட்டில் மேலும் 08 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,628 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 07 பேர் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்றும் ஒருவர் கடற்படை வீரர் என்றும் ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழியாது. தந்தையின் கனவுகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்.” – என்று அமரர். ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நோர்வூட் மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கேற்று நன்றியுரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் மறைவுச் செய்தி மலையகத்தைப் போன்று வடகிழக்கு தமிழர்களுக்கும் துயரமானதாகும்: கி.துரைராசசிங்கம்

ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் அமரரான அந்த வலிதரும் செய்தி வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கெல்லாம் மலையத்துக்கு எந்த விதத்திலும் குறையாத ஒரு துயராக, ஒரு துன்பமாகவே இருக்கிறது. இளவயதுத் தலைவரை இழந்து தவிக்கின்ற மலையக உறவுகளின் துன்பத்தில் நாங்களும் ஒன்று கலக்கின்றோம் என ...

மேலும்..

கொரோனா இறக்குமதிக்கு ராஜபக்ச அரசே பொறுப்பு! – ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்கக் குற்றச்சாட்டு

இலங்கையில் கொரோனா வைரஸை இறக்குமதி செய்தமை தொடர்பில் ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும் என்று  ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அஞ்சலிப் பதாதைகள்

மறைந்த அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அஞ்சலிப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டன. கடந்த 26ம் திகதி திடீர் மரணம் எய்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ...

மேலும்..

மட்டக்களப்பில் நாட்டுப்பற்றாளர் நடேசனின் 16,ம் ஆண்டு நினைவு வணக்கம்!

நாட்டுப்பற்றாளர் மட்டக்களப்பு ஐயாத்துரை நடேசன் அவர்களின் 16, ம் ஆண்டு நினைவு வணக்கம் இன்று 31!05/2020, மட்டக்களப்பு ஊடக அமையத்தில் அதன் தலைவர் வ.கிருஷ்ண்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவரும , ...

மேலும்..

ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை

நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, எதிர்வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைபடுத்தவும் அரச உயர் மட்டம் எண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் ...

மேலும்..

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பில் கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ...

மேலும்..

ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை ...

மேலும்..

இதுவரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

இலங்கையில் இதுவரை 63 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 1,727 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தவருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் ...

மேலும்..

நாவாந்துறையில் மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீ வாய்ப்பு

நாவாந்துறை – காக்கைதீவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் உக்கக் கூடிய திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்தும் நிலையத்தில் விசமிகளால் தீவைக்கப்பட்டுள்ளது. காக்கைதீவுப் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் திண்மக் கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்தி இயற்கை பசளைகளை உற்பத்தி செய்யும் நிலையத்தில் இந்தச் ...

மேலும்..