இலங்கை செய்திகள்

காரைதீவு, சாய்ந்தமருதில் பொலிஸ் நிலையம் இன்றுமுதல் உதயமானது

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ அவர்களின் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் கடற்கரை வீதியிலும், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் அல்- ஜலால் பாடசாலைக்கு முன்னாலும் இன்று காலை கிழக்கு மாகாண ...

மேலும்..

முன்னேஸ்வர ஆலய வருடாந்த மஹோற்சவம் குறித்த அறிவிப்பு !

வரலாற்று சிறப்புமிக்க சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சிலாபம் பிரதேச செயலாளர் பி.டபிள்யூ.எம்.எம். எஸ் பண்டார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தெதுறு ஓயாவில் இடம்பெறும் தீர்தோற்சவ நிகழ்வுடன் வருடாந்த ...

மேலும்..

யாழ் நகரில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு

யாழ் நகரில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள நடைபாதை வியாபார ஒழுங்கை பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த முதியவர் யாழ் நகரப்பகுதியில் யாசகம் செய்பவர் எனவும் முதியவர் இதய நோய் காரணமாக இறந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. யாழ்ப்பாண காவல்துறையினரினால் ...

மேலும்..

டயகம சிறுமி மரணம் – ரிஷாத்தின் மனைவி உட்பட மூவர் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் மற்றும் மற்றுமொரு நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த ...

மேலும்..

மிருகக்காட்சி சாலைகள் திறக்கும் நேரங்கள் அறிவிப்பு

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம், தெஹிவளை மிருகக்காட்சி சாலை, ரிதிகம சபாரி பார்க், பின்னவல திறந்த மிருகக்காட்சி சாலை, யானைகளை குளிப்பதை பார்வையிடல், ஆகியவற்றுக்கான நேரங்களை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், இவையாவும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல், ஏழுநாள்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை- காலை ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர ஆணையாளருக்கு எதிரான வழக்கு ,நீதிமன்றத்தின் உத்தரவு!!

மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவினை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மீறக்கூடாது எனவும் நீதிமன்றத்தினை அவமதிக்கும் நிலையினை ஏற்படுத்தக்கூடாது எனவும் ஆணையாளரின் சட்டத்தரணி ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுதந்திரன் ...

மேலும்..

சிறுமி பற்றிய விசாரணைகளுக்கு சட்டமா அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி பற்றிய விசாரணைகளுக்கு சட்டமா அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார். தனக்கு ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப்ப ...

மேலும்..

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதுவர் நியமனம்!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன்,  சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய ...

மேலும்..

கல்முனையில் தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் சனிக்கிழமை ஆரம்பம் !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் நிர்வாகத்தின் கீழுள்ள கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மக்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் ஆரம்பக்கட்டப்பணிகள் எதிர்வரும் சனிக்கிழமை கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆரம்பிக்க ...

மேலும்..

நீர்வீழ்ச்சியில் தவறிவீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் நான்காவது நாளாகவும் முன்னெடுப்பு

(க.கிஷாந்தன்)   அட்டன் – பத்தனை, டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து காணாமல் போன யுவதியை தேடும் பணிகள் இன்று (22) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   எனினும் இதுவரை குறித்த யுவதி தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   டெவோன் ...

மேலும்..

கிழக்கில் இந்திய முதலீட்டை வலுப்படுத்த யோசனை

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்  இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்பை சந்தித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டை ஊக்குவிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் நலன்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய அபிவிருத்தி ...

மேலும்..

துமிந்த சில்வா விடுதலை; நீதிமன்றம் சென்ற ஹிருணிகா!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததற்கு எதிராக, உயிரிழந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். பாரத ...

மேலும்..

கண்டியில் வயதான பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை குறித்து விசாரணை

கண்டியில் வயதான பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார். பேராதனை – ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளச் சென்றபோது, தற்செயலாக ...

மேலும்..

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் போக்குவரத்து பாதிப்பு!

அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் சில இன்று (22) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் வரையில் ஊர்வலமாக சென்றதால் கோட்டை பகுதியில் பல்வேறு வீதிகளில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு ...

மேலும்..

வட மாகாண அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்!

நாடு பூராகவும் அதிபர் ஆசிரியர்களால்  மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதே போல் வட மாகாண அதிபர் ஆசிரியர்கள் குறித்த போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர்சேவை சங்கத்தின் ...

மேலும்..