இலங்கை செய்திகள்

வெள்ளம் பாதித்தவர்களுக்கு யோகேஸ்வரன் எம்.பி. உதவி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் எற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் ...

மேலும்..

தூதரகப் பெண் கடத்தப்பட்ட விடயத்தில் இலங்கைக்கு இருக்கும் சந்தேகம் என்ன?

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகப் பெண் அதிகாரி கடத்தப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கையின் சந்தேகங்களை விளக்குமாறு இலங்கைத் தூதுவரை அழைத்து சுவிஸ் அரசு விளக்கம் கோரியுள்ளது. இலங்கை அரசு வெளியிட்டுள்ள சந்தேகங்களை நிரூபிக்குமாறும் அவரிடம் கோரப்பட்டுள்ளது. சுவிஸின் அழைப்பையேற்று பெர்லினில் வசிக்கும் ...

மேலும்..

மண்முனைப் பற்றுப் பிரதேசசபையின் பாதீடு இரண்டாவது முறையாகவும் தோற்கடிப்பு

மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நேற்யை தினம் பாதீடு தொடர்பிலான விசேட அமர்வு பிரதேசசபைத் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. பதினேழு உறுப்பினர்களைக் கொண்ட மண்முனைப் பற்றுப் பிரதேச சபையில் பாதீடு ...

மேலும்..

ஒரு தமிழரை பெருமைப்படுத்த ஒரு SMS!!!

வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி அவர்களை பெருமை படுத்த வாக்களிப்போம் உங்கள் கைத்தொலைபேசியில் ICON 5 என type செய்து 0115882626 எனும் இலக்கத்திற்கு SMS செய்யவும் மார்கழி மாதம் 6திகதிக்கு முன்னர் வாக்களித்து பெருமை படுத்துவோம்.

மேலும்..

பொதுமக்கள் பயணம் செய்ய முடியாதிருந்த ஓட்டமாவடி – அறபா நகர் பிரதான வீதியில் தேங்கிநின்ற வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது

சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட அறபா நகர் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதானால் தியாவட்டவான் 210 சீ வட்டராத்தில் அமைந்துள்ள அறபா நகர் கிராமத்துக்கான பிரதான வீதியால் பொதுமக்கள் போக்குவரத்து செய்யமுடியாத நிலை ...

மேலும்..

டெங்கு அபாய எச்சரிக்கை தொடர்பில் மாநகர முதல்வரின் அறிவித்தல்

தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நுளம்பு உற்பத்தியாகக் கூடிய இடங்களை விரைந்து சுத்தப்படுத்துமாறும், பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடிக் குவளைகளைகள் மற்றும் இதர ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாலொன்று புதன் கிழமை (4) கந்தளாய் பேராறு பகுதியில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது. ஐனாதிபதி தேர்தலின் பிற்பாடு எதிர்வருகின்ற ...

மேலும்..

டெங்கு அபாய எச்சரிக்கை -யாழ். மாநகர முதல்வரின் முக்கிய அறிவிப்பு

யாழில் தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுச் சூழலை விரைந்து சுத்தப்படுத்துமாறு யாழ். மாநகர முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ...

மேலும்..

தேர்தல்கள் செயலக கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் குறித்து நிலைப்பாடு என்ன? – மனோ தகவல்

தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற அரசியல் கட்சிகளுடனான கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும் நேற்று (புதன்கிழமை) ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். எல்லை நிர்ணய சர்ச்சை விவகாரத்தால் இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதனால், ...

மேலும்..

அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கின்றார் சஜித்!

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச மீண்டும் தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளார். இதற்கயை கொழும்பு 2 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) மிக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சஜித்திற்கு நெருக்கமானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

மழையுடனான வானிலை – 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார். மழையினால் இடம்பெயர்ந்த 900 இற்கும் அதிகமானோர் 26 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மழையுடனான ...

மேலும்..

சூரிய கிரகணத்தை அவதானிக்க யாழில் சிறப்பு முகாம்கள்!

வட இலங்கை சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை எதிர்வரும் 26ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளது. சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி, பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்குநோர்வே பிரயோக ...

மேலும்..

சிற்றுண்டிச்சாலைகளை பரிசோதனை செய்ய தீர்மானம்!

தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நிறுத்தப்படும் சிற்றுண்டிச்சாலை மற்றும் ஹோட்டல்களை பரிசோதனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்துள்ளார். பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அனைத்து மாவட்டங்களிலும் பயணிகளின் ...

மேலும்..

17 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன!

மழையுடனான காநிலை காரணமாக 17 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. தமது திணைக்களத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 62 வீதம் வரை அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. றங்ரேபே நீர்த்தேக்கத்தின் தாழ் நில பகுதியில் மகாவலி கங்கையைப் பயன்படுத்தும் பொது மக்கள் அவதானத்துடன் ...

மேலும்..

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

மழையுடனான வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையே இவ்வாறு ...

மேலும்..