கிழக்கில் குளிரூட்டப்பட்ட பேருந்துச் சேவை

கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துச் சேவையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்துவரும் வெப்பநிலையை கருத்திற் கொண்டு குறித்த பேருந்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பேருந்துகளுக்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.