February 12, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கலையரசன்,சாணக்கியன், கருணாகரம் உள்ளிட்ட எழுவருக்கு கல்முனை நீதிமன்றினால் அழைப்பாணை!

நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை, எதிர்வரும் ஏப்ரல்  30 திகதி முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி, கல்முனை பொலிஸ் நிலையத்தினால், நாடாளுமன்ற ...

மேலும்..

ஜனாஸா அடக்க விவகாரம் கைநழுவியமைக்கு 20ஆவது திருத்தமே காரணம்; ஆதரவு வழங்கிய முஸ்லிம் எம்.பி.க்களே பாவத்தை சுமக்க வேண்டும்-மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர்

ஜனாஸா அடக்க விவகாரம் கைநழுவியமைக்கு 20ஆவது திருத்தமே காரணம்; ஆதரவு வழங்கிய முஸ்லிம் எம்.பி.க்களே இப்பாவத்தை சுமக்க வேண்டும் -மு.கா. செயலாளர் நிஸாம் காரியப்பர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான பிரதமரின் அனுமதியை அமைச்சர் ஒருவர் நிராகரித்தமைக்கு காரணம் 20ஆவது ...

மேலும்..

அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவராக எஸ் எம் சபீஸ் தெரிவானார் !

(நூருல் ஹுதா உமர்) அக்கரைப்பற்று பெரிய ஜும்மா பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளன பொதுக் கூட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம் சபீஸ் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மிகவும் இளவயதில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் ...

மேலும்..

அரச கூட்டை உடைக்கச் சதி முயற்சி! – வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரச கூட்டை உடைக்கச் சிலர் சதி முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்தத் திட்டங்கள் ஒருபோதும் வெற்றியளிக்கமாட்டாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் ...

மேலும்..

நிந்தவூர் கடலில் மூழ்கிய மீன்பிடி படகு : மீனவர்களும், படகும் மக்களினால் காப்பாற்றப்பட்டது

(நூருல் ஹுதா உமர்) இலங்கையின் கிழக்கு கடலின் கடுமையான கொந்தளிப்பு மற்றும் கடலரிப்பு காரணமாக மீனவர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தல் நிலவிவருகிறது. ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பின்னர் அப்பிரதேசத்தை அண்டிய சகல பிரதேசங்களும் கடலரிப்புக்கு வெகுவாக பாதித்து வருகிறது. நேற்று மாலை 6.00 ...

மேலும்..

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராசா

இலங்கையில் இறுதிப்போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஆணையாளராக யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய உறுப்பினருமான ...

மேலும்..

ரணில் – சஜித் திடீர் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் திடீர் சந்திப்பு நடைபெற்றுள்ளது என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின்போது அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ...

மேலும்..

கல்முனையில் உளுந்து அறுவடை

(எம்.என்.எம்.அப்ராஸ் ) ‘சௌபாக்கியா’ வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் விவசாயிகளுக்கு விவசாய திணைக்களித்தினால் நாடளாவிய பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் உப உணவு பயிர் செய்கையை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தின் பிரிவுக்கு ...

மேலும்..

டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதால் ஓட்டமாவடி மையவாடி மக்களால் சிரமதானம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில்டெங்கு தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடி துப்பரசுசெய்யும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது. மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின்ஏற்பாட்டில் பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.அலியார் தலைமையில் பள்ளிவாயல் மையவாடி பிரதேசபொதுமக்களின் பங்களிப்புடன் துப்பரவு செய்யப்பட்டது. கடந்த ...

மேலும்..

லுனுகலை மடுல்சீமை எக்கிரிய பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம்

லுனுகலை மடுல்சீமை  எக்கிரிய பகுதியில்  சிறியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லுனுகல எக்கிரிய பகுதியில்    இன்று அதிகாலை 4.53 அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது. ரிக்டர் அளவுகோலில் குறைந்தளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுங்க ...

மேலும்..

ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் யாழ்.இளைஞன்!

நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் 18ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது. இந்த ஏல பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது இறுதி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 31 இலங்கை வீரர்களில் ஒன்பது ...

மேலும்..