டெங்கு தாக்கம் அதிகரித்து வருவதால் ஓட்டமாவடி மையவாடி மக்களால் சிரமதானம்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில்டெங்கு தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடி துப்பரசுசெய்யும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.

மீராவோடை மீரா ஜூம்ஆ பள்ளிவாயலின்ஏற்பாட்டில் பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.அலியார் தலைமையில் பள்ளிவாயல் மையவாடி பிரதேசபொதுமக்களின் பங்களிப்புடன் துப்பரவு செய்யப்பட்டது.

கடந்த காலங்களில் கொரோனாதொற்றால் ஏற்பட்டுப்போன சமூக இடைவெளி தொடர்பான சுகாதாரப் பிரச்சினையின் காரணமாகபராமரிப்பது சிரமம் காணப்பட்டதை தொடர்ந்து பள்ளிவாயலின் தலைவரின்  ஆலோசனைக்கமைய மாதத்திற்கு இரண்டு நாட்கள் ஊர் மக்களினால் சிரமதானப் பணியினை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில்டெங்கு தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக வரும் மக்களின்பாதுகாப்பு கருதியும், பிரதேசத்தின் பாதுகாப்பு கருதியும் மையவாடி துப்பரவு செய்யும்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்