May 8, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தலைமன்னார் – ராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவு படுத்துமாறு கோரி மன்னார் அரச அதிபரிடம் ஆவணக் காணொளி கையளிப்பு

மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.  ஜெகனின் இலக்கிய நூல்களின் ஆய்வில்  தலை மன்னார் ராமேஸ்வரம்  இடையில் கப்பல் போக்குவரத்தை விரைவுபடுத்த கோரியும் பண்டைய காலத்தில் மன்னார் மாவட்டம்  எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை  இலக்கிய நூல்கள் மூலம் ...

மேலும்..

நுவரெலியா நகரை சுற்றுலாத் தலமாக மாற்ற சிறப்புக்குழு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா நகரை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிறப்பு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ...

மேலும்..

இன்று முதல் முள்ளிவாய்க்கால் கஞ்சி: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் ஏற்பாடு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்கால் கஞ்சியை வழங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இனவழிப்புக்கு உள்ளான இனத்தின் வரலாற்றையும் வலிகளையும் இளைய ...

மேலும்..

போதை மற்றும் சமூகச் சீர்கேடுகளிலிருந்து இளைஞர் யுவதிகளை பாதுகாக்க திட்டம்! வலி.வடக்கு பிரதேச செயலகத்தில் ஆரம்பிப்பு

யாழ்ப்பாணம் வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் போதை மற்றும் சமூகசீர்கேட்டிலிருந்து இளைஞர், யுவதிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன், சர்வோதயம் அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்துடன் இணைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் திங்கட்கிழமை ...

மேலும்..

மன்னாரில் கத்திமுனையில் வைத்தியரிடமிருந்து பெருந்தொகை பணம் மற்றும் நகை கொள்ளை!

மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில்  ஓய்வுபெற்ற வைத்தியர் ஒருவரின்  தனியார் கிளினிக்கிற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள்  கத்தியை காட்டி மிரட்டி சுமார் 5 லட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த ...

மேலும்..

பதவியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தல்கள் வரவில்லை! வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தெரிவிப்பு

என்னைப் பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து எனக்கு  விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை மேற்படி பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக ...

மேலும்..

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு கிரான் பிரதேசசெயலாளர் பிரிவின் முறுத்தானையில் வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் எனப்பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டியைச் சேர்ந்த க.கிருஷ்ணப்பிள்ளை (வயது -74) என்ற முதியவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளை நாற்பதாவது வில் முறுத்தானையில் உள்ள தமது வயலில் ...

மேலும்..

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் ஸகாத் விநியோகம் குறித்த கலந்துரையாடல்

சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசங்களில் ஸகாத் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடல் சாய்ந்தமருது, மாளிகைக்காடு பைதுஸ் ஸகாத் நிதியத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது. சாய்ந்தமருது, மாளிகைக்காடு பைதுஸ் ஸகாத் நிதியத்தின் தலைவர் மௌலவி ஐ எல்.எம்.றஹ்பியின் நெறிப்படுத்தலில் ...

மேலும்..

தீம்புனல் மின்னிதழ் பத்திரிகையின் 2ஆம் ஆண்டும் விருது வழங்கலும்

தீம்புனல் மின்னிதழ் பத்திரிகையின் 2 ஆவது ஆண்டும் நிறைவும், விருது வழங்கல் விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். பருத்தித்துறை சூரிய மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது. தீம்புனல் பிரதம ஆசிரியர் சூரன் ஏ.ரவிவர்மா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபாதி பேராசிரியர் ...

மேலும்..

 கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய வைத்திய துறைகள் மேம்பாடு

! கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய வைத்திய துறைகளை கட்டியெழுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் உற்பத்திகள் தொழில்சார் பிரேரணைகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதன் தொடர்ச்சியாக கைரளிய வர்மா மற்றும் களரி சிகிச்சைகளை கல்முனை சுகாதாரப் பிராந்திய ...

மேலும்..

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் தன்சல் வழங்கல்

வெசாக்கை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் நிகழ்வு இன்று (திங்கட்கிழi) திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள மாகாண சமூக சேவைகள் திணைக்கத்துக்கு முன்னால் இடம்பெற்றது. மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த தன்சஸ் நிகழ்வுக்கு ...

மேலும்..

மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபு கல்லூரியின் பட்டமளிப்பு விழா!

அநுராதபுரம், மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக் கல்லூரியின் அல்-ஆலீம்களுக்கான 02 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதவாச்சி, முகையதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது. அரபுக் கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் சஹாப்தீன் மற்றும் அதிபர் அஷ்-ஷெய்ஹ் பாயிஸ் (றஷாதி) தலைமையில் நடைபெற்ற ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலாளர் லியாக்கத் அலிக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்து செய்யகோரல்!  பிரதமர் தினேஸூக்கு ஹரீஸ் எம்.பி. கோரிக்கை

கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலிக்கு வருடாந்த இடமாற்றம் மூலம் வழங்கப்பட்ட மண்முனை தென்மேற்கு பிரதேச (பட்டிப்பளை)  செயலகத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை ரத்துச் செய்ய கோரி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு ...

மேலும்..

எருக்கலம்பிட்டி இப்றாஹிம் மறைவு கவலை தருகிறது!  மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் அனுதாபம்

மன்னார், எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் அல்ஹாஜ் முஹம்மது இப்றாஹிம் சேர் இறையடி சேர்ந்த செய்தி கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு தொடர்பாக அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் ...

மேலும்..

ஹற்றன் நகரத்தில் சோறு அன்னதானம்

(க.கிஷாந்தன்) இலங்கையில் வெசாக் தினம் தற்போது நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக மலையகத்தின் ஹற்றன் நகரத்தில் சோறு அன்னதானம் (பத் தன்சல்) வழங்கபட்டது. இந்த அன்னதான ...

மேலும்..

ஹப்புத்தளை பத்கொட பகுதியில் பவுஸர் விபத்து!

(க.கிஷாந்தன்) ஹப்புத்தளை பத்கொட பகுதியில், கடந்த சனிக்கிழமை அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிகாலை 2.30 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் கொள்கலன் ஊர்தி, ...

மேலும்..

கொக்கிளாய் மாணவர்களுக்கு கற்றல் கருவிகள் வழங்கிவைப்பு!

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - கொக்கிளாய் அ.த.க.பாடசாலை மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை கற்றல் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீP சீரடி சாயிபாபா ஆலயம் - தூண் சுவிஸ்லாந்து நிர்வாகத்தினராலேயே இவ்வாறு கற்றல் கருவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வு கொக்கிளாய் அ.த.க. பாடசாலையின் முதல்வர் கணேசலிங்கம் தனேஸ்வரன் தலைமையில் ...

மேலும்..

கல்முனை பஹ்ரியாவின் பவளவிழா விளையாட்டுப் பெருவிழா ஆரம்பம்!

நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய மூத்த பாடசாலைகளில் ஒன்றான கமுஃகமுஃஅல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு பவளவிழாவை முன்னிட்டு பாடசாலை சமூகத்தால் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் பெருவிழா நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை மாலை மிக விமரிசையாகப் பாடசாலை அதிபர் ...

மேலும்..

வடக்கு – கிழக்கு குறித்த பேச்சுகளுக்கு முஸ்லிம் பிரதிநிதிகளையும் அழைக்குக! ஜனாதிபதிக்கு மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா கோரிக்கை

மாளிகைக்காடு நிருபர் வடக்கு - கிழக்கு இனப்பிரச்சினை பேச்சு மேசைக்கு முஸ்லிம் பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிழக்கை தளமாக கொண்ட சிவில் அமைப்பான அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீPலங்கா அமைப்பு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. அவர்கள் ஜனாதிபதிக்கு முன்வைத்துள்ள கோரிக்கையில் ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் 15 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!

நூருல் ஹூதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மே மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுவக்கர் ...

மேலும்..

திருக்கோவில் கல்விவலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நூருல் ஹூதா உமர் மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்ற நோக்கில் இணைந்த கரங்கள் அமைப்பால் நாடு தழுவிய ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை என்பன வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலயத்தில் ...

மேலும்..