இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்

இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட பாகிஸ்தான் பிரதமர் விருப்பம்
பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் அண்மையில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றிய போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது.
ஆனால் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் துருக்கியைச் சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் இருந்து நிறைய பலன்களைப் பெற வேண்டும்.
இந்தியாவுடனான ஆரோக்கியமான வர்த்தக நடவடிக்கை மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளைப் பற்றி நாங்கள் அறிவோம். இரு நாடுகளும் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.
எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கிறார்கள். மேலும் பாகிஸ்தான் இராணுவமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
உரி, மதன்கோட் மற்றும் புல்வாமா பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
May be an image of footwear and text

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்