“நீங்க அப்டி சொன்னது தப்பு”.. ஜனனியுடன் வாக்குவாதத்தில் விக்ரமன், தனலட்சுமி!!

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

vikraman and dhanalakshmi about reels speech of janani

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதனால் தொடர்ந்து பிக்பாஸ் குறித்த விஷயங்கள், இணையத்தில் எப்போதுமே ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பித்த பிக்பாஸ் 6 ஆவது சீசன், அடுத்தடுத்து டாஸ்க்குகள் மற்றும் அணியாக பிரிந்த பிறகு, ஏகப்பட்ட பிரச்சனைகள் மற்றும் விவாதங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறி வருகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் எvikraman and dhanalakshmi about reels speech of jananiன்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. உள்ளே எந்த அளவுக்கு பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்து ஜிபி முத்து செய்து வரும் விஷயங்கள், பலரது ஆதரவினையும் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து, எப்போதும்  கலகலப்பாக இருந்தாலும் தான் நடிப்பதாக தனலட்சுமி குறிப்பிட்டதை எண்ணி கண்ணீர் விடவும் செய்திருந்தார்.

vikraman and dhanalakshmi about reels speech of janani

தனலட்சுமி அப்படி குறிப்பிட்டதும் இருந்த இடத்தில் இருந்து வேகமாக ஜிபி முத்து எழ, பதிலுக்கு தனலட்சுமியும் எப்படி எகிற வருகிறீர்கள் என கேட்டு கோபம் அடைந்தார். இதன் பின்னர், போட்டியாளர்கள் அனைவரும் அவர்களை சமரசம் செய்ய தனலட்சுமி தொடர்ந்து கோபத்தில் இருந்தார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், ஜனனியும் ஜிபி முத்துவிற்கு ஆதரவாக கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார். தனலட்சுமி செய்வது தனக்கு பிடிக்கவில்லை என்றும், ரீல்ஸ் வீடியோவை போல இங்கேயுள்ள அனைவரையும் வயது வித்தியாசம் பார்க்காமல் ஒன்றாக பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.

vikraman and dhanalakshmi about reels speech of janani

ஜிபி முத்துவிற்கு ஆதரவாக ஜனனி கருத்துக்களை குறிப்பிட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக விக்ரமன் சொல்லும் கருத்துக்கள் தொடர்பான ப்ரோமோ தற்போது இன்னும் பரபரப்பை கிளப்பி உள்ளது. “ஒரே வயதில் இருந்து வருவதற்கு ரீல்ஸ் கிடையாது என்றால், என்ன அர்த்தத்தில் இந்த இடத்தில் ரீல்ஸ் என்ற வார்த்தை வந்தது?” என்ற கேள்வியை சக போட்டியாளர்களிடம் தனலட்சுமி எழுப்புகிறார்.

vikraman and dhanalakshmi about reels speech of janani

இது பற்றி ஜனனியிடம் கேள்வி எழுப்பிய விக்ரமன், “ரீல்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தியது தப்பு தான். வயசுக்கும் மரியாதை இல்லை என கூறினீர்கள். அப்படி என்றால் அடித்தால் வாங்கிக் கொள்ள வேண்டுமா?” என்ற கேள்வியை முன் வைக்கிறார்.

ஜிபி முத்து – தனலட்சுமி விவகாரமும் அடுத்ததாக ஜிபி முத்துவுக்கு ஆதரவாக பேசிய ஜனனி விஷயமும், தற்போது அவருக்கு எதிராக கேள்வி எழுந்துள்ள விஷயமும் பிக்பாஸ் வீட்டில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தி வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்