விஜய் நடிக்கும் வாரிசு.. இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த இடத்துலயா?

வாரிசு படத்தின் படப்பிடிப்பு குறித்த பிரத்யேக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Thalapathy Vijay Varisu Movie Last Schedule Shooting Update

தளபதி விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் ‘வாரிசு’ படம் உருவாகி வருகிறது.

‘வாரிசு’ படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

Thalapathy Vijay Varisu Movie Last Schedule Shooting Update

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ஆக உள்ளனர். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் , கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதம்   நடந்தது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay Varisu Movie Last Schedule Shooting Update

இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு  சில நாட்களுக்கு முன் சென்னையில் துவங்கி உள்ளது. இதில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் வசனங்கள் அடங்கிய படப்பிடிப்பை நடிகர் விஜய் நிறைவு செய்த நிலையில் வாரிசு படத்தில் இன்னும் ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சிக்கான படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னை திருவேற்காட்டில் உள்ள கோகுலம் ஸ்டூடியோஸில் பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட உள்ளன என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் தீபாவளி விடுமுறை கழித்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அக்டோபர் மாதத்துடன் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விடும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்