தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – மோடி

தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் 90வது சர்வதேச இன்டர்போல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தீவிரவாதம் தொடர்பான உளவுத்துறை தகவல்களை பரிமாறுவது விரைவான தகவல் பரிமாற்றம் மூலமாக சதிச்செயல்களைத் தடுப்பது, தொழில்நுட்ப உதவிகளைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவற்றின் அவசியத்தையும் அவர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்