“ஒரு அண்ணன் தற்கொலை.. இன்னொரு அண்ணன் விபத்துல மரணம்”.. ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தின் சோக பின்னணி.! பிக்பாஸில் உடைத்த அவரது சகோதரர்.!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

aishwarya rajesh brother shares family story bigg boss 6 tamil

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

aishwarya rajesh brother shares family story bigg boss 6 tamil

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, மாடல் ஷெரினா, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

aishwarya rajesh brother shares family story bigg boss 6 tamil

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளராக தங்களுடைய கதையை சொல்லக்கூடிய நடைபெற்று வருகிறது. முந்தைய சீசன்களை போல் அல்லாமல், போட்டியாளர்கள் தங்களுடைய கதைகளை முழுமையாக செல்லக்கூடிய வாய்ப்பு இந்த முறை இல்லை. இந்தமுறை போட்டியாளர்கள் சொல்லக்கூடிய கதை சுவாரசியமாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் இல்லை என்று ஒருவர் கருதினால் உடனடியாக வந்து பஸ்ஸரை பிரஸ் பண்ணுவதன் மூலம், தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கலாம். அப்படி 3 போட்டியாளர்கள் பஸ்ஸரை அழுத்திவிட்டால், கதை சொல்பவர் தங்களுடைய கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

aishwarya rajesh brother shares family story bigg boss 6 tamil

இதில் முக்கிய போட்டியாளராக கலந்துகொண்டுள்ள (நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்) மணிகண்டன் ராஜேஷ்,  அவருடைய மனைவியும் நடிகையுமான சோஃபியா பற்றி கூறும்போது, “என்னுடைய மனைவிக்கு 20 வயதாகும் போது நான் அவரை திருமணம் செய்து கொண்டேன். இன்று நினைத்தாலும் அந்த குற்ற உணர்ச்சி எனக்கு உள்ளே இருக்கிறது. அவர் மிகவும் சிறிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்டார். ஆம், அவருடைய 21 வயதில் குழந்தை பெற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட அவருக்கு கருப்பை வெளியே வந்துவிட்டது. இன்று அனைவரும் நல்ல நிலையில் வாழ்கிறோம். நிச்சயமாக சோஃபியாவை நன்றாக பார்த்துக் கொள்வேன்” என்று உருக்கமாக பேசினார்.

aishwarya rajesh brother shares family story bigg boss 6 tamil

முன்னதாக தம்முடைய குடும்பத்தினர் பற்றி கூறினார். அப்போது மணிகண்டன் ராஜேஷ், “என்னுடைய இரண்டு மூத்த சகோதரர்களும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இறந்து விட்டார்கள். ஒரு அண்ணன் காதல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அப்போது நாங்கள் மனம் உடைந்துவிட்டோம், பிறகு நானும் என் குடும்பமும் சிரமப்பட்டோம். சரி இன்னொரு அண்ணன் இருக்கிறார் என நினைத்த எங்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சியாக இன்னொரு அண்ணனும் விபத்தில் இறந்தார்.

பின்னர் நானும் தங்கச்சியும் அம்மாவை பார்த்துக்கொள்ள வேண்டும், குடும்பத்துக்காகவும் எங்களுக்காகவும் பணிகளை செய்தோம். நான் முதலில் கால் செண்டர் வேலை சென்றேன். பின்னர் மீடியோவில் ஈவண்ட் பணிகளை 200 ரூபாய்க்கு செய்தேன். அப்போது என் தங்கச்சி விஜே வேலைகளை செய்து வந்தார். இருவரும் சினிமாவில் முயற்சித்தோம். நான் தங்கைக்காகவே சினிமாவில் முயற்சித்தேன். இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறோம். நன்றி” என பேசினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்