மேற்கூரை சூரிய மின் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அனுமதி
மேற்கூரை சூரிய கலங்களுக்கான கட்டண விகிதங்களை திருத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கம் கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
500 கிலோவாட்டுக்கும் குறைவாக உற்பத்தி செய்யும் கூரை சூரிய கலங்களுக்கு தற்போதுள்ள இரு அடுக்கு கட்டண விகிதமான ரூ. 22.00 மற்றும் ரூ. 15.50 பிளாட் கட்டணமாக ரூ. 37.00 ஆக உயர்த்தப்படும்.
இதற்கிடையில், 500 கிலோவாட்டுக்கு மேல் உற்பத்தி செய்யும் கூரை சூரிய கலங்களுக்கு ரூ. 34.50 வழங்கப்படும் என அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கட்டண விகிதங்கள், 20 வருடங்களுக்கு அமுலில் இருக்கும் என்றும், விலை சூத்திரத்தின்படி வருடாந்தம் மாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை