“பாலினத்தை கிண்டல் பண்ணாதீங்க.?”.. ஒன்று சேர்ந்த விக்ரமன், அமுதவாணன், சிவின், தனலட்சுமி .. ரகளையான பிக்பாஸ் வீடு

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Amuthavanan vikraman fight Azeem for sivin and dhana bigg boss

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Amuthavanan vikraman fight Azeem for sivin and dhana bigg boss

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இதில் இரண்டு அணிகளாக பிரிந்து தத்தம் பொம்மையினை டால் தொட்டியில் இருந்து டால் ஹவுஸில் சேர்க்கக் கூடிய டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இதில் எதிர் அணியினரின் பொம்மையை எடுத்துக்கொண்டும், அவர்களின் பொம்மையை டால் ஹவுஸில் கொண்டு சேர்ப்பதை தடுத்துக் கொண்டும் இந்த கேமை ஆட முடியும்.

Amuthavanan vikraman fight Azeem for sivin and dhana bigg boss

இதில் பொம்மையை எடுத்துக்கொண்டு ஷெரினா வெளியேற முற்படும்போது இரண்டு விதமான அணிகளும் மோதிக்கொண்டதை அடுத்து, அப்பொழுது ஷெரினா நிலை தவறி கீழே விழுகிறார். அவரை சுற்றி ஹவுஸ்மேட்ஸ் நெரித்ததால் இந்த நிலை உண்டானது. இதனால் ஷெரினாவின் தலையில் அடிபட்டது. பின்னர் அசீம் தூக்கிக் கொண்டு ஓடினார். அப்போது கோபமாக வந்து தனலட்சுமி பற்றி பேசும் அசீம்,“அறிவு இருக்கா? பெர்சனல் வெஞ்சன்ஸை இந்த வீட்ல காட்டாத.. நிவாஷினியையும் ஷெரினாவையும் அப்படி பிடிச்சு தள்ளிவிடுற? சொல்றேன்.. எவ்ளோ கூலா நிக்குறா பாரு… கொஞ்சமாச்சும் மனித நேயம் இருக்கணும்.. இவ்வளவு தூரம் சொல்றோம்.. எப்படி நிக்குறா.. நடக்குறா பாரு (தனலட்சுமி அங்கும்ங்குமாக பேசாமல் நடந்துகொண்டிருந்தார்.) கேம்னா ஒருவரை கொன்றுவாங்களா?” என வெடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது டான் டாஸ்கின் அடுத்த கட்டம் பரபரப்பாகி இருக்கிறது. அதன்படி டால் ஹவுஸின் முன்னாள் வாசலில் தனலட்சுமி நின்றபடி தடுத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட ஒரு பொம்மையை தனலட்சுமி உள்ளே சென்று வைக்க அந்த பொம்மையை எப்படி நீ உள்ளே சென்று வைக்கலாம் என்று அசீம் கேட்கிறார்,  இது விதிமீறல் என்பதால் மீண்டும் தனலட்சுமி அந்த பொம்மையை கொண்டு வந்து வெளியே தூக்கி வீசிவிட்டு வாசலில் தடுத்தபடி நின்று கொண்டிருக்கிறார். அப்போது மீண்டும் அசீம் எப்படி இப்போது இந்த பொம்மையை வெளியே தூக்கி போடலாம்? என்று தனலட்சுமியிடம் கேள்வி எழுப்பியதுடன், தான் வைத்திருக்கும் பொம்மையை எடுத்துக் கொண்டு தனலட்சுமியை ஒரே இடியாக வேகமாக இடித்து உள்ளே சென்று டால் ஹவுஸில் பொம்மையை வைக்கிறார்.

Amuthavanan vikraman fight Azeem for sivin and dhana bigg boss

இதுகுறித்து அசீமிடம் ஷிவின் நியாயம் கேட்க, அதற்கு கோபமாக பதில் சொல்லிகொண்டிருந்த அசீம், உடல்மொழியால் ரியாக்ட் பண்ணிகொண்டே பதில் சொன்னார். இதனால் கோபம் அடைந்த விக்ரமன், திருநங்கை ஷிவினை குறிக்கும் வகையில் பாலின ரீதியிலான உடல் மொழியை பிரதிபலித்ததாக அசீமை குற்றம் சாட்டி மன்னிப்பு கேட்க சொல்கிறார். ஏற்கனவே தனலட்சுமியை ஒரு கையால் வேகமாக பிடித்து தள்ளியதற்கும், இப்போது ஷிவினை உடல்மொழியால் கேலி செய்ததற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என விக்ரமனும், அமுதவாணனும், பேச உடன் சேர்ந்துகொண்ட தனலட்சுமியும் ஷிவினுக்காக அசீமுடன் வாதிடுகிறார். இதற்கு அசீம் தரப்பு பதில்களை இன்றைய எபிசோடிலோ அல்லது வார இறுதியிலோ எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்