தொங்கு பாலம் விபத்து: 14-ல் உச்சநீதிமன்றம் விசாரணை…

மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நவம்பர் 14ஆம் திகதி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

குஜராத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 141 பேர் உயிரிழந்தனர்.

இந்த பாலத்தில் புனரமைப்புப் பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்த நிலையில், அரசிடம் அனுமதி பெறாமல் திட்டமிடப்பட்டதற்கு முன்பே பாலம் திறக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், நாட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலங்களை தணிக்கை செய்யக் கோரியும் வழக்கறிஞர் விஷால் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்