கன்பெஷன் ரூமில் கதறி கதறி அழுத தனலட்சுமி.. ஜிபி முத்து போல வெளியில் அனுப்பப்படுவாரா?

தனலட்சுமி

பிக் பாஸ் ஷோவில் முதல் சில வாரங்கள் நல்ல பெயர் எடுத்துவந்த தனலட்சுமி தற்போது அப்படியே தலைகீழாக கமல்ஹாசனிடம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறார்.

கடந்த வாரம் நடந்த ஸ்வீட் கடை டாஸ்கில் அவர் விதிகளை மீறி பணத்தை பதுக்கி மோசடியாக வெற்றி பெற்றார் என குற்றம்சாட்டிய கமல் அந்த வெற்றியை அவரிடம் இருந்து பறித்து விக்ரமனை வெற்றியாளராக அறிவித்தார்.

கன்பெஷன் ரூமில் கதறி கதறி அழுத தனலட்சுமி.. ஜிபி முத்து போல வெளியில் அனுப்பப்படுவாரா? | Dhanalakshmi Cries In Confession Room Bigg Boss 6

 

கதறி அழுத தனலட்சுமி

நேற்று பாத்ரூமில் இதற்காக கதறி அழுத தனலட்சுமி இன்று கன்பெக்ஷன் ரூமுக்கு சென்று மேலும் மன அழுத்தத்துடன் கதறி அழுதிருக்கிறார்.

“வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவமானமாக இருக்கு, இந்த சின்ன விஷயம் இவ்ளோ பெருசா வெடிக்கும் என எனக்கு தெரியாது. நான் நேர்மையாக இருக்கிறேன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் திருடி பட்டம் வாங்கியது போல இருக்கு” என சொல்லி அவர் கதறி அழுதிருக்கிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்