விவசாயக்கடன் மீதான வட்டி தள்ளுபடி: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு…

விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டியை மாநில அரசே வங்கிகளில் திருப்பி செலுத்தும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார்.

விவசாயக் கடன்கள் இரத்து செய்யப்படும் என்று முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நம்பி கடன்களைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளுக்கு இந்த சலுகை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்

மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் பாரதிய விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய கூட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, 15 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த முந்தைய காங்கிரஸ் அரசாங்கம், 25 லட்சம் விவசாயிகளின் 110 கோடி ரூபாய் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ததை ஆளும் பாஜக அரசாங்கமே சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சிவ்ராஜ் சிங் சௌகானுக்கு விவசாயிகள் மீது உண்மையான அக்கறையிருந்தால் அவர்களின் கடன் தொகையைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.