கொரோனா தாக்கிய ஆண்களுக்கு பேரிடி – ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கிய ஆண்களின் 30 பேரிடம் நடத்திய ஆய்வில் 12 பேருக்கு 40 சதவீதம் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தமை தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இது குறித்து டெல்லி, பாட்னா மற்றும் ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

 

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு பேரிடி - ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சி தகவல் | Sperm Count Of Men Affected By Corona Is Low

குறிப்பாக பாட்னாவில் எய்ம்ஸ் வைத்தியசாலையில் ஒக்டோபர் 2020 மற்றும் ஏப்ரல் 2021க்கு இடையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 19 முதல் 43 வயதுக்கு உட்பட்ட 30 ஆண்களின் விந்தணு சோதனை என்று அழைக்கப்படும் விந்து பகுப்பாய்வு அடிப்படியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொற்று ஏற்பட்ட உடன் முதல் பகுப்பாய்வு செய்யப்பட்டது, அதன் பின் இரண்டரை மாதங்கள் இடைவெளிக்கு பின் சேகரிக்கப்பட்ட விந்துவில் சார்ஸ் – கோவ் 2 இல்லை என்றாலும், முதல் மாதிரியில் இந்த ஆண்களின் விந்து தரம் மோசமாக இருந்தது தெரியவந்தது.

இரண்டரை மாத இடைவெளிக்கு பின்னும் அதன் உகந்த நிலையை எட்ட முடியவில்லை.

விந்தணுப் பகுப்பாய்வில் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணுக்களின் வடிவம் விந்தணுவின் இயக்கம், என்ற 3 முக்கிய காரணத்தை பொறுத்தே அளவிடப்படுகிறது.

30 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 12 பேருக்கு 40 சதவீதம் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இரண்டைரை மாதங்களுக்கு பின் 3 பேருக்கு இந்த பிரச்சினை இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

மேலும் முதல் விந்து மாதிரியில் 30 பேரில் 10 பேரின் விந்தணுவின் அளவு 1.5 மில்லிக்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக இந்த அளவானது ஒரு விந்து தள்ளளுக்கு 1.5 முதல் 5 மில்லி வரை இருக்க வேண்டும்.

இதே போல விந்து திரவத்தின் தடிமன், உயிர்ச்சக்தி மற்றும் மொத்த இயக்கம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.