இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பலை நிறுத்தியுள்ள இந்தியா!

தென் சீன கடல் பகுதி தொடர்பாக சீனாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கான ஒட்டுமொத்த ராஜ தந்திர ராணுவ நடவடிக்கையில் ஒரு பகுதியாக சீனாவுடன் மோதலில் ஈடுபட்டுள்ள இந்தோனேசியாவில், இந்தியா தனது நீர்மூழ்கி கப்பலை நிறுத்தியுள்ளது.

மூன்று ஆயிரம் லிற்றர் டீசல் மற்றும் எலக்ட்ரிக்கில் இயங்கும் இந்த நீர்மூழ்கி கப்பலான INS சிந்து கேசரி நேற்று முன்தினம் (23-02-2023) சுந்தா ஜலசந்தி வழியாக சென்று ஜகார்த்தாவை அடைந்தது.

ஆசிய நாடுகளுடன் போர் பயிற்சிகள், பரிமாற்றங்கள், போர் விமானங்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்களை இயக்குவதற்கான பயிற்சி திட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் ஆயுதங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியா தொடர்ந்து பாதுகாப்பு முடிவுகளை மேம்படுத்தி வருகிறது.

 

இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பலை நிறுத்தியுள்ள இந்தியா! | India Has Stopped A Submarine In Indonesia

இந்தியாவும் இந்தோனசியாவும் தங்கள் வியூக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பரந்த அளவிலான பகுதிகளில் விரிவுப்படுத்தியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.