நான்கு வருடங்களில் 08 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி கிடைக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான்கு வருடங்களில் 08 தடவைகளில் 300 கோடி அமெரிக்க டொலர் கடன் தொகை பெறப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பாக பொருளாதாரப் பேராசிரியர் ஒருவர் வாரப் பத்திரிகையில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதிக்குள் அதற்கான கடன் தொகைக்கான முதற்கட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அதனை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன எனவும் அதன் பின்னர் நிதி உதவி கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்படும் ஒப்பந்தங்களின் பின்னர், இரண்டு தடவைகளில் உலக வங்கியிடமிருந்தும் பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் இலங்கைக்கு உதவிகள் கிடைக்கும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.