மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா! ஐந்து உலக நாட்டு தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசால் அழைப்பு

‘மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருவிழா’ எனும் நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுவதற்காக ஐந்து உலக நாட்டு தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து மலேசிய இந்தியக் காங்கிரஸ் துணைத் தலைவரும், மேனாள் மனித வளத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், இலக்கியப் பேச்சாளருமான டத்தோ ஸ்ரீP.எம்.சரவணன்.

சிங்கப்பூரிலிருந்து தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன்,

இலங்கையிலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், உட்பட புலம்பெயர் தமிழர்களிலிருந்து சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவரும், எழுத்தாளருமான முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா (கலாநிதி கல்லாறு சதீஷ்) ஆகியோர் தமிழக அரச விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்