இந்திய பெற்றோலிய அமைச்சகத்தின் செயலாளர்- IOC தலைவர் இலங்கைக்கு வருகை!

இந்தியாவின் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின் மற்றும் இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷன் (IOC) லிமிடெட்டின் தலைவர் ஷிர்காந்த் மாதவ் வைத்யா ஆகியோர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிய முடிகின்றது.

நாட்டிற்கு வரும் இருவரும், இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷனின் செயல்பாடுகளை அந்த நாட்டின் பெற்றோலியம் மற்றும் இயற்கை அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது

கடந்த ஆண்டின் முற்பகுதியில், லங்கா ஐஓசி பிஎல்சி மற்றும் இலங்கை அரசின் கீழ் வரும் சிலோன் பெற்றோலியம் கோர்ப்பரேஷன் ஆகியன இணைந்து டிரின்கோ பெற்றோலியம் டேர்மினல் என்ற கூட்டு முயற்சியை உருவாக்கின.

இதனையடுத்து குறித்த நிறுவனம் தனது வலையமைப்பை மேலும் 50 நிரப்பு நிலையங்களுடன் விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அண்மையில் அனுமதியை பெற்றுக்கொண்டது. இந்த நிலையில் இவர்கள் இருவரின் விஜயம் அமையவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்