விஷ வாயு தாக்கி காதல் ஜோடி மரணம் – அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல் ஜோடி
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரும், சுதாராணி என்பவரும் பெங்களூருவில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

இதனையடுத்து, வீட்டின் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி சந்திரசேகர் தங்கியிருக்கும் வீட்டிற்கு சுதாராணி அவரை பார்ப்பதற்காகச் சென்றார். அப்போது, வீட்டில் குளியல் அறையில் உள்ள நீர் சூடேற்கும் கருவியை ஆன் செய்து இருவரும் ஒன்றாக குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென்று சூடேற்றும் கருவியில் கோளாறு ஏற்பட்டப்போது, அதிலிருந்து விஷ வாயு கசியத் தொடங்கியது. இதை கவனிக்காத இருவரும் அந்த விஷ வாயுவை சுவாசித்ததால் சிறிது நேரத்திலேயே இருவரும் மயங்கி விழுந்தனர்.

விஷ வாயு தாக்கி காதல் ஜோடி மரணம்
வெகு நேரம் ஆகியும் வெளியே சந்திரசேகர் வராததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது, சந்திரசேகர் வராததால் அக்கம், பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, இருவரும் மூச்சு இல்லாமல் மயங்கி நிலையில் கிடந்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், மருத்துவமனையில் அவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் விஷவாயு தாக்கி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்