கண்டியில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் நால்வர் கைது!

ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களை விற்பனை செய்வதற்காக, கொள்வனவு செய்பவர் வரும் வரையில் கண்டி நகரில் தங்கியிருந்த நால்வர் கஜமுத்துக்களுடன் கண்டி ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி தலைமையக பொலிஸாரின் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அநுராதபுரம், அலவ்வ மற்றும் தலத்துஓயா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் 23-33 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு கஜமுத்துக்களும் அநுராதபுரத்தைச் சேர்ந்த சந்தேக நபருக்கு சொந்தமானது எனவும் பொலிஸார் கூறினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்