யாழ்ப்பாணத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

இந்திய அரசானது இன்று(15) தனது 77 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

அந்தவகையில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றிவைத்தார்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.

இந்நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்