கொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிகபட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.

பிரிட்டனில் கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த மேலும் 936 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் கடுமையான மொத்த எண்ணிக்கையாக 7  ஆயிரத்திற்கு அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ளன.

இங்கிலாந்து மருத்துவமனைகளில் 22 முதல் 103 வயது வரையிலான 828 பேர் இறந்துள்ளதாக NHS உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 77 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 336 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. வேல்ஸில் மேலும் 284 குடிமக்கள் நேர்மறை சோதனைக்கு உட்பட்டதாகவும், 33 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் பொது சுகாதார துறை அறிவித்தது. வடக்கு அயர்லாந்தில் மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளன.

பிரிட்டனில் கோவிட் -19 நெருக்கடியில் இதுவரை நிகழ்ந்த மிக மோசமான தினசரி மரணங்களில் இன்றய 936 இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பிரிட்டனில்  வைரஸ் தொற்றுக்கான நேர்மறையான பரிசோதனையில் இதுவரை 55,000 க்கும் அதிகமானவர்கள் இனம் காணப்பாட்டாலும், வெகுஜன சோதனையின் பற்றாக்குறை காரணமாக உண்மையான பரவுகையைின் அளவை நாம் ஒருபோதும் அறிந்திருக்கப் போவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்