நீண்ட வார விடுமுறையில், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு, பிரிட்டிஸ் அரசாங்கம் மக்களை கோரியுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை அடுத்து பிரிட்டனின் முடக்கம் இந்த வார இறுதியில் அதன் கடுமையான சோதனையை எதிர்கொள்வதாக கூட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று வெள்ளி முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை நீண்ட வார விடுமுறையில் வீட்டிற்குள் முடங்கியிருக்குமாறு பொதுமக்கள் மீதான வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன.

அரசாங்க தனியார் வங்கி விடுமுறைகள் காணமாக விடுமுறையைக் கழிக்கும் மக்கள் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் மக்களை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை பொரிஸ் ஜோன்சன் கொரோனா வைரஸுடன் தொடர்ந்து போராடுவதாகவும், எனினும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதற்கிடையில், பிரித்தானியாவில் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய இறப்பு எண்ணிக்கை 8,ஆயிரத்தை அண்மித்து 7,978 ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.