தமபலகாம பிரதேச செயலக பிரிவில் அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா விசேட கொடுப்பனவில் 7370 நபர்களுக்கு 3685000 ரூபா வழங்கப்பட்டுள்ளது…

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ் நிலை காரணமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவுகளில்  திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் 7370 நபர்களுக்கு ரூபா 36850000  நிதி வழங்கப்பட்டுள்ளதாக தம்பலகம பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி தெரிவித்தார்.
இக் கொடுப்பனவுகளில் (10) சமுர்த்தி  5290 பயனாளிகளில் 4877 பயனாளிகளுக்கு மொத்தமாக 24385000 ரூபாவும்,சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2287 பயனாளிகளில் 1669 பயனாளிகளுக்கு மொத்தமாக 8345000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதுடன்.
மேலும் விசேட தேவையுடைய 134 பயனாளிகளில் 133 பயனாளிகளுக்கு 665000 ரூபாவும், விசேட தேவையுடைய காத்திருப்பு பட்டியலில் உள்ள 55 நபர்களில் மொத்தமாக 55 பயனாளிகளுக்கு 275000 ரூபாவும், முதியோர் கொடுப்பனவுகளில் 625 பயனாளிகளில் 502 பயனாளிகளுக்கு மொத்தமாக 2510000 ரூபாவும், முதியோர் காத்திருப்பு பட்டியலில் 127 பயனாளிகளில் 103 நபர்களுக்கு 515000 ரூபாவும் ,சிறு நீரக நோயாளர்களில் 33 நபர்களில் 31 நபர்களுக்கு மொத்தமாக 155000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் சமுர்த்தி   கொடுப்பனவில் மொத்த தொகையாக 26450000 ரூபாவும்,சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் 11435000 ரூபாவும், ஏனைய பயனாளிகளின் கொடுப்பனவாக 4870000 ரூபாவுமாக ஒட்டு மொத்தத் தொகையாக 42755000ரூபா பணம் தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக  பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்