பிரிட்டனின் முடக்க நிலையை, மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கும் அறிவிப்பு இன்று வெளியாகும்?

கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து,    பிரிட்டனின் வாழ்க்கை முறைமைகள்  இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, பிரிட்டனின்  முடக்க நடவடிக்கைகளை, நேரடியாக முழுமையாக  தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்  என எதிர்பார்க்க முடியாது  என  சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள, கொரோனா வைரஸிற்கான  சமூக தொலைதூர  நடவடிக்கைகள் முழுமையாக படிப்படியாக அகற்றப்படுவதற்கு “நேரம் எடுக்கும்” எனவும் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

COVID-19  பரவுதலை கட்டுப்படுத்தும்  முயற்சியில் மூன்று வார அவசரகால நிலை குறிப்பாக  “வீட்டிலேயே இருத்தல்” விதிகளை நீட்டிப்பதற்கான  அறிவிப்பை  அரசாங்கம்  மேற்கொள்ளும் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.  இது ஏற்கனவே குறைந்தது 12,868 பேரின்  இறப்புக்களை அடிப்படையாக கொண்ட  நடவடிக்கை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போரிஸ் ஜோன்சனுக்காக பிரதிநிதித்துவப்படுத்தும் வெளியுறவு செயலாளர்  டொமினிக் ராப் தலைமையில் கோப்ரா என அழைக்கப்படும் அரசாங்கத்தின் அவசரக் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, அமைச்சரவை அமைச்சர்கள் வீடியோ மாநாடு மூலம் சமீபத்திய அறிவியல் மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவார்கள். இதன் பின் இன்று பிற்பகல் நடைபெறும் செய்தி மாநாட்டில் பூட்டுதல் நீட்டிப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை “நாங்கள் முழு முடக்கத்தில் இருந்து முழுமையாக வெளியேற ஒரே ஒரு வழி உள்ளது, அதுவே எங்களுக்கு ஒரு தடுப்பூசி கிடைக்கப்பெறவேண்டும். அதுவரை, நாம் சமூத்தை பாதுகாப்பதற்கான  வழிகளைக் கண்டுபிடித்து, நாட்டின் ஆரோக்கியத்திற்கும் நமது பொருளாதாரத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்”  என  சுகாதார துறை அமைச்சர், Nadine Dorries தனது ருவீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்