கொரோனா – தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகள் பாதிப்பு
விழுப்புரத்தில் 1 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 111 குழந்தைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 12 வயதுக்கு உட்பட்ட 110 குழந்தைகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் கோவையில் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தையும் காணப்படுகின்றனர்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 110 குழந்தைகளில் 59 ஆண் குழந்தையும், 51 பெண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று பாதிக்கப்பட்ட 52 பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் 1 வயது குழந்தைக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருத்துக்களேதுமில்லை