ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை அரசாங்கம் இழக்கும் அபாயம்!

ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை, அரசாங்கம் இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக்கும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை நிரூபிக்கும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை 52,000 பேருக்கு மட்டுமே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 250,000பேருக்கு சோதனைகளை மேற்கொள்வதற்கான நோக்கத்தை வெளியிட்டார்.

எனினும், ஏப்ரல் 2ஆம் திகதி அமைச்சர் ஹான்கொக் அரசாங்கத்தின் தினசரி சோதனை இலக்கை 100,000 என நிர்ணயித்தார். அத்துடன் ஏப்ரல் இறுதிக்குள் இலக்கை அடைவதாகவும் உறுதியளித்தார்.

ஆனால், தற்போது ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் என்ற கொரோனா வைரஸ் சோதனை இலக்கை அடைவது என்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

மருத்துவமனைத் தலைவர்கள் இந்த எண்ணிக்கையை ‘சிவப்பு ஹெர்ரிங்’ என்று வர்ணித்துள்ளனர். அத்தோடு மிகப்பெரிய அளவில் சோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதனையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த மூலோபாயம், கொரோனா வைரஸ் தொற்று பரவலை சிறந்த முறையில் கையாளும் ஜேர்மனி உள்ளிட்ட பிற நாடுகளால் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.