சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!

சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 250 இற்க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை பிரித்தானியா கொள்வனவு செய்துள்ளது.

இந்த நிலையில், குறித்த வென்டிலேட்டர்கள் குறித்து பிரித்தானிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீனாவிலிருந்து பெறப்பட்ட வென்டிலேட்டர்கள், ‘ஷாங்க்ரிலா 510 மொடல்’, இவை பிரித்தானிய மருத்துவர்களுக்கு அறிமுகமில்லாதவை என கூறப்படுகின்றது.

அத்துடன், இயந்திரங்கள் சிக்கலான ஒக்ஸிஜன் விநியோகம், ஒழுங்காக சுத்தம் செய்ய முடியவில்லை, அறிமுகமில்லாத வடிவமைப்பு மற்றும் குழப்பமான அறிவுறுத்தல் கையேடு ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.

மேலும் குறிப்பாக, இவை மருத்துவமனைகளில் அல்ல, ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டவை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல, கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உள்ள கொள்முதல் பிரச்சினைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.