பருவ நோய்த் தடுப்புத் திட்டம் தொடர்கிறது- சுகாதாரத் துறை பெற்றோருக்கு அறிவிப்பு!

பிரித்தானிய தேசிய சுகாதார சேவை இன்னும் அத்தியாவசியத் தடுப்பூசிகளை அளித்து வருவதாகவும், தங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளைப் போடுவதை தவறவிட வேண்டாம் என்றும் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் யாரும் கொவிட்-19 வைரஸ் தொற்று அறிகுறிகளைக் கொண்டிருக்காதவரை, கிளினிக்குகள் மற்றும் பொது பயிற்சியாளர்களால் வழங்கப்படும் சேவைகளுக்கு (GP surgeries) வருகை தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரித்தானியாவின் பொது சுகாதார நோய்த் தடுப்புத் தலைவர் டாக்டர் மேரி ராம்சே கூறுகையில்,

“நாட்டின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக தேசிய நோய்த் தடுப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. அம்மை, மூளைக்காய்ச்சல் மற்றும் நிமோனியா போன்ற நோய்களின் பேரழிவு பாதிப்பு குறித்து யாரும் சந்தேகப்படக் கூடாது.

இந்த நேரத்தில், இந்த நோய்த்தொற்றுகள் மீண்டும் எழுவதைத் தடுப்பதற்கான சிறந்த தடுப்பூசியைப் பராமரிப்பது முக்கியம்” எனக் கூறினார்.

வயதான குழந்தைகளுக்கு வழங்கப்படும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) ஐப் போன்றவை, பாடசாலைகளில் வழக்கமாக வழங்கப்படும் தடுப்பூசிகள் ஆகும். ஆனால் தற்போது இவை இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் தனிப்பட்ட கிளினிக்குகளிலிருந்து இந்த தடுப்பூசிகள் கிடைக்கக்கூடும்.

வேல்ஸ் பொது சுகாதார சேவையின் அறிக்கையின் படி, இந்த வாரம் வழக்கமான தடுப்பூசி எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பருவ நோய்த் தடுப்புத் திட்டம், தொடர் இருமல், அம்மை மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.