இணைய வழி கற்பித்தலுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்!

இலையுதிர்காலத்தில் இணைய வழியாக கற்பித்தாலும், பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக்கழக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இலையுதிர்காலத்தில் நேரில் கற்பித்தல் இருக்குமா அல்லது படிப்புகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இணைய வழியாகக் கற்பிக்கப்படுமா என்பது குறித்து மாணவர்களுக்கு நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் இலையுதிர்காலத்தில் இணைய வழியாக கற்பித்தல் நடைபெறும் வகையிலான அறிவிப்பொன்றை பல்கலைத் துறைக்கான அமைச்சர் மைக்கேல் டொனலன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

‘அடுத்த கல்வியாண்டில் எந்தவொரு முறையான முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் கல்வி நடவடிக்கைகள் இணைய வழியாகக் கற்பிக்கப்பட்டு, மாணவர்கள் உண்மையிலேயே தரத்தைப் பெறுகிறார்கள். மேலும் அவர்கள் ஒரு பாடத்திட்டத்தைப் முழுமையாகப் பெறுகிறார்கள். ஆகையால் அவர்கள் கட்டணத்தில் தள்ளுபடி பெற மாட்டார்கள்’ என கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு மாணவர்களைக் குறைப்பதால் நிதி ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால், பல்கலைக்கழகத் துறை 2 பில்லியன் டொலர்கள் கோரியிருந்தது. எனினும் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்