வரலாற்றில் முதல் தடவையாக எளிமையாக கொண்டாடப்பட்ட அரசு குடும்ப விழா

பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் ஹரி மற்றும் மேர்கன் மார்க்கல் தம்பதிகளின் புதல்வன், ஆர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்ஸரின் முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

ஆர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்ஸரின் (Archie Mountbatten-Windsor) குறித்த பிறந்த நாள் நேற்று புதன்கிழமை கொண்டாடப்பட்டுள்ளது.

பிரித்தானிய முடிக்குரிய அரச குடும்பத்தின் எட்டாவது பூட்டப்பிள்ளையாக ஆர்ச்சி காணப்படும் நிலையில், குறித்த பிறந்த தினம் எவ்வித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக கொண்டாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Save the Children அமைப்பின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிடப்பட்டுள்ள குறித்த பிறந்த நாள் நிகழ்வு காணொளியில், ஆர்ச்சியின் தாயார் மேர்கன் மார்க்கெல் தனது குழந்தையினை களிப்பூட்டி கதைகள் சொல்வது பதிவிடப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்துகொண்ட ஹரி மற்றும் மேர்கன் மார்க்கல் கடந்த மார்ச் மாத இறுதியில் தமக்கான அரச அங்கீகாரத்தை துறப்பதாக அறிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து மூவரும் தற்போது அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல் நகரில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்