நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம்- 7 பேர் படுகாயம்!

தமிழகத்தின் நெய்வேலி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பொய்லர் வெடித்ததில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம், ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக நெய்வேயில் அனல் மின் நிலையம் செயற்பட்டு வருகிறது.

நெய்வேலி அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் இன்று (வியாழக்கிழமை) பொய்லர் வெடித்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பொய்லர் வெடித்ததால் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புதுறை வீரர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்